திட்டி தீர்த்த அஜித் ரசிகர்கள் – தளபதி ஸ்டைலில் பதில் அளித்த ஷிவாங்கி. இவங்கள போய் சின்ன பொண்ணுன்னு சொல்றாங்களே.

0
8560
shivangi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவைடந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று. முதல் சீசனுக்கு கிடைத்த ஆதரவை தொடர்ந்து இரண்டாம் சீசனுக்கு பேராதரவு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டுஇருந்தது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வந்தார்.

-விளம்பரம்-

இந்த சீசனுக்கு பின்னர் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட புகழ் கிடைத்தது. பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான ஷிவாங்கி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அதில் பாதியிலேயே எலிமினேட் ஆனார். அதன் பின்னர் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

- Advertisement -

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் பலரும் இவரை தங்கள் வீட்டுப் பெண்ணாக தான் நினைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஷிவங்கியை அஜித் ரசிகர்கள் சிலர் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் ஷிவாங்கி பேசிய இந்த வீடியோ தான்.அந்த வீடியோவில் விஜய் நடித்த கடைசி படம் குறித்து கேட்டதற்கு மாஸ்டர் என்று சரியாக சொன்ன சிவாங்கி, தல படம் எண்டு கேட்டதற்கு விவேகம், வேதாளம் என்று கூறினார். அதே போல அவரின் படம் வரப்போதே ‘அடிக்கடி அப்டேட் கேப்பங்கேளே’ என்று சொல்லி சிரித்தார்.

இந்த வவீடியோ தான் தற்போது அஜித் ரசிகர்கள் பலரையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.ஏற்கனவே வலிமை அப்டே வராமல் அஜித் ரசிகர்கள் கடுப்பில் இருக்க, வெந்த புண்ணில் வேலை பாச்சிய கதையாக வலிமை படத்தை பற்றி கேலி செய்யும் வகையில் சிவாங்கி பேசியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஆனால், ஷிவாங்கி எதார்த்தமாக சொன்ன இந்த வீடியோவை விஜய் அஜித் சண்டையாக மாற்றிவிட வேண்டாம் என்று பல ரசிகர்கள் ஷிவாங்கிக்கு ஆதரவாக பதிவிட்டு வந்தனர்.

-விளம்பரம்-
sivangi-krish-insta

அதுமட்டுமல்லாமல் ஷிவாங்கி ஹேஷ் டேக் இந்திய அளவிலும் ட்ரெண்டிங்கில் வந்தது. இப்படி ஒரு நிலையில் ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ‘Inhale Positivity, Exhale Negativity’ என்று கேப்ஷனை பதிவிட்டார்.  இந்த கேப்ஷன் தளபதி விஜய் மேடையில் Ignore Negativity என்று கூறியிருப்பதற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. இதனால் தளபதியின் கேப்ஷன் போட்டு தலரசிகர்களுக்கு ஷிவாங்கி பதில் கொடுத்திருப்பது போல் தான் இருக்கிறது.

Advertisement