‘அத பத்தி யோசிங்க’ – முதன் முறையாக தன்னை Cringe என்று கேலி செய்த Meme குறித்து பதிலடி கொடுத்த ஷிவாங்கி (எவ்ளோ தான் பொறுகும் பாப்பா)

0
947
shivangi
- Advertisement -

தன்னை கேலி செய்து மீம் போட்டவருக்கு முதன் முறையாக பதிலடி கொடுத்துள்ளார் ஷிவாங்கி. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-379.jpg

அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். அதுமட்டும் இல்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. அதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனையில் மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது.

- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சியின் நடுவர் வெங்கடேஷ் பத் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள்.தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கி கோலாகலமாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் சிவாங்கி . இவர் பிரபல பின்னனி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் தான் ஷிவாங்கி.

This image has an empty alt attribute; its file name is 1-182-703x1024.jpg

குக்கு வித் கோமாளி ஏற்படுத்தி கொடுத்த புகழ் :

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.இவர் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் படை உருவாகி இருந்தது. அதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின்- சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

வாய்ப்பு கொடுத்த SK :

இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் கும்பல் இருந்தது. அந்த அளவிற்கு இரண்டாம் சீசன் நிகழ்ச்சியில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல். அதேபோல் சிவாங்கியும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் பாடி வருகிறார். அதோடு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவரை கவனித்த சிவகார்த்திகேயன் இவரை சினிமாவிலும் அறிமுகம் செய்து வைத்தார்.

கேலிக்கு முதன் முறையாக பதிலடி :

ஷிவாங்கி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். இந்த படத்தில் இவர் நடித்த போதே இவரை கேலி செய்து பல விதமான மீம்கள் வைரலானது. இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ஒருவர் ‘குக்கு வித் கோமாளில இந்த வாரம் Cringe ஷிவாங்கி இல்ல’ என்று மீம் போட்டு கலாய்த்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஷிவாங்கி ‘இல்லாத என்ன பத்தி பேசி hate பண்றதுக்கு இருக்குற செம்ம கோமாலிஸ் பத்தி பேசுனா சூப்பரா இருக்கும்ல ப்ரோ ? அத பத்தி யோசிங்க’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement