குக் வித் கோமாளியில் புகழ் இல்லை என்று வருத்தப்பட்ட ரசிகர்கள் – ஷிவாங்கி சொன்ன காரணம் இதோ.

0
2069
pugal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது. சொல்லப்போனால் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 4நிகழ்ச்சியை விட இந்த ஷோவிற்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

-விளம்பரம்-
pugazh

இந்த சீஸனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான மற்றும் பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் குக்காக கலந்து கொண்டு உள்ளனர். அதே போல இந்த சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, சக்தி, பார்வதி, மணிமேகலை, ஷிவாங்கி என்று பலர் கலந்து கொண்ட நிலையில் போட்டியாளராக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா என்று 8 பேர் கலந்து கொண்டனர். இதில் மதுரை முத்து, தீபா, தர்ஷா குப்தாவும் இதுவரை வெளியேறியுள்ளனர்.

இதையும் பாருங்க : படப்பிடிப்பின் போது ஏற்பட்ட அடி, 20 வருடங்களாக படுக்கையில் இருக்கும் பாரதி ராஜாவின் ஹீரோ. கொடுமையான வீடியோ.

- Advertisement -

இந்த சீசன் இந்த அளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதற்கு காரணமே இந்த சீசனில் வரும் கோமாளிகள் தான். அதிலும் புகழ், பாலா, ஷிவானி, மணிமேகலையின் ரகலைகளுக்கு அளவே இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. அதிலும் இந்த சீசனில் புகழுக்கு நிகராக ஷிவாங்கி வேற லெவலில் என்டர்டைன் செய்து வருகிறார். ஆனால், இந்த வாரம் வாரம் புகழ் இல்லாதது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கான காரணத்தை நேற்று அஸ்வினிடம் சொன்ன ஷிவாங்கி, அவர் சந்தானம் படத்தின் ஷூட்ங்கில் இருக்கிறார் என்று கூறி இருந்தார். நடிகர் சந்தானம் நடித்து வரும் ‘சபாபதி’ படத்தில் தற்போது புகழ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சந்தனத்துடன் புகழ் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வளைத்தளத்தில் வெளியானது. காமெடி என்டர்டெய்னராக இருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement