நான் பஞ்சாபி,உங்க அப்பா என்ன விட சின்ன பையன், கடத்திட்டு போய்டதா கேஸ் குடுத்துங்க – ஸ்ருதிகாவின் அம்மா பகிர்ந்த லவ் ஸ்டோரி.

0
400
- Advertisement -

குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா அம்மாவின் காதல் கதை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ருத்திகா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார். ஆனால், முதல் படமே படு தோல்வியடைந்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவர் ஆல்பம், தித்திக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கிறார் . ஆனால், இவர் நடித்த எந்த படமும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடைய வில்லை. அதோடு மறைந்த நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி தான் நடிகை ஸ்ருதிக்கா. தேங்காய் ஸ்ரீனிவாசன் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் காலகட்டத்தில் குணச்சித்திர நடிகராகவும், காமெடியனாகவும் கலக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

ஸ்ருத்திகா திரை பயணம்:

இருந்தாலும் ஸ்ருத்திகாவால் சினிமா துறையில் சாதிக்க முடியவில்லை. இவர் சினிமாவில் இருந்து விலகி அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நீண்ட இடைவெளிக்கு பின் ஸ்ருத்திகா குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அதோடு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது என்று சொல்லலாம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து நான்கு சீசனுக்கும் எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். இந்த நிகழ்ச்சியின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ருதிக்கா மீடியாவிற்கு நுழைந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய பேச்சும், சமையலும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு மீண்டும் ரசிகர் பட்டாளம் உருவாகிறது என்று சொல்லலாம். தற்போது மிக பிரபலமான செலிபிரிட்டியாக ஸ்ருத்திகா திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

ஸ்ருதிகாஸ் கிச்சன் சேனல்:

தற்போது இவர் ஸ்ருதிகாஸ் கிச்சன் என்ற youtube சேனல் ஒன்றை துவங்கி அதில் சமையல் செய்யும் கலாட்டா வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ருத்திகா தன்னுடைய அம்மாவுடன் இணைந்து சமையல் செய்த வீடியோக்களை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் ஸ்ருத்திகா அம்மா கல்பனா, அப்போது ஷங்கர் ரொம்ப சின்ன பையன். அவனுக்கு 19 வயது தான். அவர் தென்னிந்தியாள் தான். நான் பஞ்சாபி பொண்ணு. எனக்கு அப்போது 23 வயது. என்னை விட நாலு வயது சிறியவர் சங்கர். நானும் சங்கரும் ஊரைவிட்டு ஓடிப் போய் விட்டோம்.

ஸ்ருத்திகா அம்மா காதல் கதை:

எல்லோரும் எங்களை தேடினார்கள். ஒரு பொண்ணு சங்கரை கிட்னாப் செய்துவிட்டார் என்று பேப்பரில் நியூஸ் வந்தது. அதைப் பார்த்து நான் பீச்சில் விழ போனேன். சங்கர் தான் என்னை காப்பாற்றி கூட்டிட்டு வந்தார். இங்க வந்து பார்த்தால் அடுத்த பூகமும் காத்துக் கொண்டிருந்தது. போலீஸ் என்னிடம் விசாரித்தார்கள். நீ அந்த பையனை கடத்திக் கொண்டு போனியா? என்று கேட்டார்கள். போய் அவனிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவனும் நானும் லவ் பண்ணி தானே போனோம். அதற்குப் பிறகு என்ன கிட்னாப் பண்ணியான்னு கேக்குறாங்க. உன்னோட லவ் ஸ்டோரி எல்லாம் வேஸ்ட். இப்போ சொல்லு யாருடைய லவ் ஸ்டோரி பெஸ்ட் என்று வேடிக்கையாக கல்பனா கூறியிருக்கிறார். இப்படி ஸ்ருதிகாவுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு குழந்தை போல் அவருடைய அம்மா பேசியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement