இட்லி குண்டான் 6000 காபி கப்பு 1500 – தலை சுற்றவைக்கும் வெங்கடேஷ் பட்டின் கிட்சன் பிஸ்னஸ்

0
636
- Advertisement -

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலம் வெங்கடேஷ் பட் புதிதாக தொடங்கி இருக்கும் பிசினஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. இதற்கு காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

இதுவரை நான்கு சீசன்கள் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. கூடிய விரைவில் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக வெங்கடேஷ் பத் மற்றும் தாமு இருக்கிறார்கள். நான்கு சீசன்களிலும் இவர்கள் தான் நடுவர்களாக இருந்தார்கள். இவர்கள் இருவருமே ஏற்கனவே பல டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர். இவர்கள் இருவமே கோமாளிகளை ஒரு வழி செய்து விடுவார்கள்.

- Advertisement -

குக் வித் கோமாளி:

மேலும், இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனவர் வெங்கடேஷ் பத். இவர் இந்தியா முழுக்க இருக்கும் பல்வேறு ஹோட்டல்களில் சிறப்பு செஃப்பாக இருக்கிறார். இவர் அசைவம் சாப்பிடுவது இல்லை என்றாலும் வெறும் வாசனையை வைத்தே அதில் இருக்கும் உப்பு முதல்கொண்டு சொல்லிவிடுவார். அந்த அளவிற்கு மிகவும் திறமையான ஒரு செஃப்பாக தான் இவரை சொல்ல வேண்டும். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருக்கிறார்.

வெங்கடேஷ் பத் குறித்த தகவல்:

இருந்தாலும், அந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் கறாரான நடுவராக இருந்தவர். பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அப்படியே மாறி மிகவும் ஜாலியான ஒரு நடுவராக திகழ்ந்து வருகிறார். சமையல் நிகழ்ச்சியை விட இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் ரசிகர்களை ஏற்படுத்திக் கொடுத்தது என்பதை மறுக்க முடியாத உண்மை. தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில்கூட சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

Vbdace தொழில்:

அது மட்டும் இல்லாமல் இவர் நிறைய பைவ் ஸ்டார் ஓட்டல்களில் சீஃப் செப்பாக இருக்கிறார். இப்படி மாதம் லட்சக்கணக்கில் இவர் சம்பாதிக்கிறார் என்று சொல்லலாம். இந்த நிலையில் வெங்கடேஷ் பட் புதிதாக தொடங்கி இருக்கும் பிஸ்னஸ் குறித்த தகவல் தான் வைரலாகி வருகிறது. அதாவது, இவர் ஆன்லைன் மூலம் கிட்சன் செட் பிஸ்னஸ் துவங்கி இருக்கிறார். அதற்கு Vbdace என்று பெயர் வைத்து இருக்கிறார். அதில் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் எல்லாம் விற்பனைக்கு இருக்கிறது.

பொருட்கள் விலை:

அதில் ஒரு கத்தியின் விலை 1000, இட்லி குண்டா 6000, காபி கப்பு 1500, சின்ன கடாயின் விலை 4000, வடிகட்டியின் விலை 1500, ஆறு டீஸ்பூன் ஆயிரம் என்று விலை போடப்பட்டிருக்கிறது. இந்த பொருள்களின் விலைகளை பார்த்து நெட்டிசன்கள் பலருமே விமர்சித்து வருகிறார்கள். இதற்கு வெங்கடேஷ் பட், இந்த ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு பயன்பாடு இருக்கிறது. இதை வைத்து பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியம் ஆக இருக்கும் என்று விவரித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பல இன்ஸ்டா இன்புளுயன்சர்களை வைத்து தன்னுடைய கிச்சன் பிசினஸை விளம்பரம் செய்து வருகிறார்

Advertisement