சங்கர் சார், உங்க பொண்ண பத்தி பேசுனது தப்புதான், என்ன மன்னிச்சுடுங்க – அந்தர் பல்டி அடித்த கூல் சுரேஷ்.

0
261
coolsuresh
- Advertisement -

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதியை காதலிப்பதாக கூல் சுரேஷ் கூறி மன்னிப்பு கேட்டு இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பாலிவுட்டை போலவே தமிழ் சினிமாவிலும் வாரிசு நடிகர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். விஜய், விக்ரம், விஜய் சேதுபதி என்று பலர் தங்கள் வாரிசுகளை சினிமாவில் அறிமுகம் செய்து இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவின் புதிய வாரிசு நடிகையாக வந்து இருப்பவர் தான் அதிதி.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குனர் சங்கர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இப்படி ஒரு நிலையில் இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர்.

- Advertisement -

விருமன் படம்:

இவர் தமிழ் சினிமா உலகில் கதாநாயகியாக களம் இறங்கி இருக்கிறார். தமிழ் சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டு இருக்கும் கார்த்தி படத்தில் தான் சங்கர் மகள் அதிதி நடித்து இருக்கிறார். கார்த்தி ஹீரோவாக நடித்து இருக்கும் படம் ‘விருமன்’. இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். கொம்பன் படத்திற்கு பிறகு கார்த்திக் மற்றும் முத்தையா இந்த படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

விருமன் படம் குறித்த தகவல்:

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விருமன் படமும் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி வருகிறது. மேலும், இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் வெளியாகி முதல் நாளே 8 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்திருக்கிறது. இப்படம் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது

-விளம்பரம்-

அதிதி நடிப்பு:

அது மட்டுமில்லாமல் நடிகை அதிதிக்கும் இந்த படம் சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தின் மூலம் அதிதிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. பலரும் அதிதி நடிப்பையும், நடனத்தையும் பார்த்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் முதல் படத்திலேயே அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் மன்றம் தொடங்கி நிகழ்வுகளும் அரங்கேறி உள்ளது. இதனிடையே சங்கரின் மகள் அதிதியை காதலிப்பதாக நகைச்சுவை நடிகர் சுரேஷ் கூறியிருந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதிதியை காதலிப்பதாக சொன்ன கூல் சுரேஷ்:

சில தினங்களுக்கு முன்பு கூல் சுரேஷ் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர், படத்தில் காதலை சேர்த்து வைப்பது போல் என்னுடைய காதலையும் சேர்த்து வையுங்கள் என்று சங்கருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில் கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, சங்கர் மகளை காதலிப்பதாக கூறியதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதிதி என்னுடைய தங்கச்சி மாதிரி என்றும் கூறியிருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

Advertisement