சார் விட்ருங்க சார்,வேணாம் – படம் பார்க்க வந்த பெண்ணிடம் முத்தம் கேட்டு தொல்லை செய்த கூல் சுரேஷ்.

0
481
coolsuresh
- Advertisement -

படம் பார்க்க வந்த பெண்ணிடம் கூல் சுரேஷ் முத்தம் கேட்டு தொல்லை செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இனி வெந்து தணிந்தது காடு இல்லை பத்து தல படத்தின் வசனம் தான் என்று கூல் சுரேஷ் வெளியீட்டு உள்ள வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ். இவர் பல ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தாலும் சமீப காலமாக அணைத்து படங்களுக்கும் தியேட்டர் வாசலில் சென்று விமர்சனம் கொடுத்து தான் தற்போது பிரபலமாகி இருக்கிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் இன்று வெளியான பகாசூரன் மற்றும் வாத்தி ஆகிய இரண்டு படங்களையும் பார்ப்பதற்காக கூல் சுரேஷ் சென்றிருந்தார். இதில் பகாசூரன் படத்தில் சுரேஷ் ஒரு முக்கிய அதான் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து பேசிய கூல் சுரேஷ், இது என்னுடைய நூறாவது திரைப்படம். என்னுடைய நூறாவது திரைப்படமாக இந்த படம் அமைந்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கூறினார்.

- Advertisement -

அப்போது படம் பார்க்க வந்த பெண் ஒருவரை அழைத்து அவரின் தோள் மீது கையை போட்டுக்கொண்டு இது உங்களைப் போன்ற பெண்களுக்கான படம் தான். இந்த படத்தை பார்த்து நீங்கள் எல்லாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அந்த பெண்ணிற்கு அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நான் எல்லா நடிகைக்கும் முத்தம் கொடுக்கிறேன் என்று அனைவரும் என்னை கேட்டு வருகிறார்கள்.

இப்போது பாருங்கள் இது என்னுடைய தங்கைதான் என்று கூறிய கூல் சுரேஷ் அந்த பெண்ணிடம் முத்தம் கொடுக்குமாறு கேட்டு இருந்தார். ஆனால், அந்த பெண்ணும் சார் விட்டுடுங்க சார் விட்டுடுங்க சார் என்று அவரிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற அளவில் இருந்தார். சுரேஷ் எவ்வளவோ கேட்டும் முத்தம் கொடுக்க அந்த பெண் மறுத்ததால் உடனே கூல் சுரேஷ் இது என்னுடைய தங்கை மாதிரி அதனால்தான் அப்படி கேட்டேன்.

-விளம்பரம்-

இந்த படத்தை பார்த்த காரணத்தினால் தான் இவர் தற்போது உஷாராக இருக்கிறார் என்று பூசி மழுப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக விடுதலைத்தில் வைரலாக பரவி வருகிறது. இதே போல தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாக்ஷி அகர்வால் நடிப்பில் ‘நான் கடவுள் இல்லை’ திரைப்படமானது வெளியானது. இந்தப் படத்தை பார்த்து விட்டு வழக்கம் போல தன்னுடைய விமர்சனத்தை கூல் சுரேஷ் கூறியிருந்தார்.

அப்போது அருகில் நின்று கொண்டிருந்த இந்த படத்தின் நாயகி சாக்ஷி அகர்வால் தோலின் மீது கையை பேசிக்கொண்டு இருந்த கூல் சுரேஷ் திடீரென்று சாக்ஷி அகர்வாலுக்கு முத்தம் கொடுத்து விட்டார். இதனைக் கண்ட அங்கு இருந்தவர்கள் பலரும் ஒரு கணம் அதிர்ச்சியானார்கள். இதேபோலத்தான் ஒரு நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்தின் கையை பிடித்து தடவி கூல் சுரேஷ் அட்ராசிட்டி செய்திருந்தது நிட்டிசன்களை பெரும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருந்தது. தற்போது படம் பார்க்க வந்த பெண்ணிடம் கூல் சுரேஷ் இப்படி அநாகரிகமாக நடந்து கொண்டு இருக்கும் இந்த சம்பவமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement