சிம்பு ரசிகர்களால் சல்லி சல்லியா நொறுங்கிய கூல் சுரேஷின் கார் – கூல் சுரேஷ் சொன்னது இதான்.

0
645
- Advertisement -

சிம்புவின் ரசிகர்கள் சுக்குநூறாக கூல் சுரேஷின் காரை நொறுக்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இன்று சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தில் சிம்புவுடன், ராதிகா, சித்தி இத்னானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறர்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தனது வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்பு அவர்கள் தன்னுடைய அம்மா, தங்கையுடன் வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

வெந்து தணிந்தது காடு படம்:

இவர் வயகாட்டில் வேலை செய்து தன்னுடைய குடும்பத்தை பாதுகாத்து வருகிறார். அப்போது ஒரு நாள் வயக்காட்டில் வேலை செய்யும் போது சிம்புவுக்கு விபத்து ஏற்படுகிறது. இதை நினைத்து அவருடைய தாய் பயப்படுகிறார். பின் உறவினர் மூலம் சிம்புவை வேறு ஒரு வேலைக்கு அனுப்ப முயற்சி செய்கிறார். இந்த சூழ்நிலையில் தான் உறவினரும் தற்கொலை செய்து கொள்கிறார். பின் சிம்பு மும்பைக்கு செல்கிறார்.

படத்தின் கதை:

அங்கு பரோட்டா கடையில் வேலை செய்கிறார். எதிர்பாராத விதமாக கேங்ஸ்டர் கும்பலில் சிம்பு சிக்கி கொள்கிறார். இறுதியில் சிம்புவின் வாழ்க்கை என்ன ஆனது? சிம்புவின் குடும்பத்தின் நிலைமை என்ன? சொந்த ஊருக்கே சிம்பு திரும்பினாரா? என்பது தான் படத்தின் மீதி. காதல், கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. படத்தில் ஏ ஆர் ரகுமான் இசைகளும் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தின் விமர்சனம்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் சிம்புவின் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கூல் சுரேஷின் காரை சிம்புவின் ரசிகர்கள் சுக்கு நூறாக நொறுக்கி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதாவது, வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸை ஒட்டி சிம்புவின் ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் அவர்கள் திரையரங்கிற்கு வந்திருக்கிறார்.

கூல் சுரேஷின் காரை நொறுக்கிய ரசிகர்கள்:

சிம்புவின் ரசிகர்கள் கூல் சுரேஷின் காரை சூழ்ந்து அவரிடம் போட்டோ எடுப்பது, படத்தைக் கொண்டாடுவது என்று உற்சாகத்தில் இருந்தார்கள். அப்போது தீவிர ரசிகர் ஒருவர் கூல் சுரேஷின் கார் கண்ணாடியின் மீது ஏறி அவரிடம் ஃபோட்டோ எடுத்தார். இருந்தும் கூல் சுரேஷ் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் சிம்புவின் ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை பார்த்து ‘வெந்து தணிந்தது காடு தலைவர் எஸ் டி ஆருக்கு வணக்கத்தை போடு என்று கொண்டாடி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement