பிக் பாஸ் நடிகையிடம் எல்லை மீறிய கூல் சுரேஷ் – வைரலாகும் வீடியோ.

0
303
- Advertisement -

வெந்து தணிந்தது காடு மற்றும் எஸ்டிஆரின் பத்து தல படத்தின் என்ற வசனம் மூலம் பிரபலமான கூல் சுரேஷ். இவர் படம் முடிந்த பிறகு வந்து ரீவிவ் சொல்லுவார். இதற்காகவே பலரும் காத்துக்கொண்டிருப்பார். இப்படிப்பட்ட நிலையில் “நான் கடவுள் இல்லை” படத்தின் ரீவிவ் சொல்லும் போது அதிர்ச்சியூட்டும் சம்பவத்தை செய்துள்ளர் கூல் சுரேஷ். சமீப காலமாக சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் கூல் சுரேஷ்.

-விளம்பரம்-

திரைப்பயணம் :

இவர் தமிழ் சினிமா உலகில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.அதற்கு பிறகு இவர் பல படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்து பிரபலமானார். அதுமட்டுமில்லாமல் இவர் படங்களில் கலர் கலராக ஹேர் ஸ்டைலும், காஸ்ட்யூம் போட்டு கலக்கிய இவர் சினிமாவில் வில்லனாக தான் அறிமுகமானார்.

- Advertisement -

பின் காமெடியனாக மாறி நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் பிறகு நாட்கள் செல்லச் செல்ல இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தற்போது இவர் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்று. எந்த படமானாலும் சரி, எந்த கதை என்றாலும் சரி இவர் வெந்து தணிந்தது காடு என்று தொடங்கி தன்னுடைய கருத்தை சொல்லிக் சொல்லுவார்

நான் கடவுள் இல்லை :

இப்படி பட்ட நிலையில் தான் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் “நான் கடவுள் இல்லை” திரைப்படமானது சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், மேலும் சாக்க்ஷி அகர்வால், இனியா ரோகிணி, சரவணன், இமான் அண்ணாச்சி போன்றவர்கள் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில் நான் கடவுள் இல்லை திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ரீவியூ கொடுத்த கூல் சுரேஷ் :

இப்படியிருக்கும் போது நான் கடவுள் இல்லை படத்தின் நாயகி சாக்க்ஷியுடன் இப்படத்தை பார்க்க கூல் சுரேஷும் வந்திருந்தார். எப்போதும் போல அவர் நான் கடவுள் இல்லை படத்தை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். இப்படி பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ் நடிகை சாக்ஷி பக்கத்தில் இருந்ததால் அவர் தோலின் மீது கை போட்டு பேசிக்கொண்டிருந்தார். அப்போதுதான் பெரிய விஷியத்தை செய்து விட்டார் கூல் சுரேஷ்.

முத்தம் கொடுத்த கூல் சுரேஷ் :

அதாவது பேசிக்கொண்டே இருக்கும் போது யாருமே அதிபாராத வண்ணம் அருகில் இருந்த சாக்க்ஷிக்கு சட்டென்று முத்தம் கொடுத்து விட்டார். இதனை பார்த்த பத்திரிகையாளர்கள் அதிர்ந்து போக எப்போதும் போல கூல் சுரேஷும் தன்னுடைய பாணியில் அதனை இப்படியே பேசி சமாளித்து விட்டார். இந்நிலையில் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகவே ஏற்கனவே இதே போன்று நடிகை யாஷிகாவிடம் சிலுமிசம் செய்த கூல் சுரேஷ் தற்போது நடிகை சாக்ஷிக்கும் முத்தம் கொடுத்த கூல் சுரேஷை ரசிங்கர்கள் கடுமையாக சோசியல் மீடியாவில் தீட்டி வருகின்றனர்.

Advertisement