படத்தில் தனுஷ் புகை பிடித்த வழக்கில் ஐஸ்வர்யா ரஜினி நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலகி இருப்பது தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் இறுதியாக தனுஷ் நடித்த மாறன் திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. அதற்கு பின் தனுஷ் அவர்கள் நானே வருவேன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். கலைப்புலி எஸ் தாணு உடைய வி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்து இருக்கிறது. செல்வராகவன் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து தனுஷ் அவர்கள் வாத்தி, sir போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனை அடுத்து தனுஷ் அவர்கள் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அதனை தொடர்நது இயக்குனர் மாதேஸ்வரன் -தனுஷ் கூட்டணியில் கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாக இருக்கிறது. அதேபோல் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் தி கிரே மேன். இந்த படம் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் ஜூலை 15ஆம் உள்ளிட்ட திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் பின்னர் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த படம் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிகர் தனுஷ் புகைப்பிடித்தல் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விலகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா-தனுஷ் மீது புகார்:

அதாவது, நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த படம் வேலையில்லா பட்டதாரி. இந்த படத்தின் படத்தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்த படத்தில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விளம்பரப்படுத்தல் தடை மற்றும் முறைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தில் நடிகர் தனுஷ் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் வரும் போது திரையில் இடம்பெற வேண்டிய எச்சரிக்கை வாசகம் உரிய முறையில் இடம் பெறவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு காண மக்கள் அமைப்பின் சார்பில் 2004 ஆம் ஆண்டு தமிழக அரசிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

Advertisement

இதையும் பாருங்க : ‘இப்படிலாம் விளம்பரம் செய்யாதீங்க’ நான் 4 சீன்ல தான் நடிச்சி இருக்கேன், ஹீரோ இவர் தான் – ஹீரோவை நெகிழ வைத்த யோகி பாபு.

Advertisement

ஐஸ்வர்யா ரஜினி வைத்த கோரிக்கை:

இதில் விசாரணையை மேற்கொண்ட பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் நிறுவன இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் தனுஷுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்கள். இதை விசாரணைக்கு ஏற்ற சைதாப்பேட்டை நீதிமன்றம் இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

நீதிபதி சொன்ன தீர்ப்பு:

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது சுகாதாரத்துறை இயக்குனருக்கு நீதிபதி உத்தரவு போட்டு இருக்கிறார். அதோடு இந்த விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷும் வழக்கு தொடர இருப்பதாகவும், தற்போது அவர் கிரேமேன் படப் பணிகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதால் சென்னை திரும்பிய பிறகு கையெழுத்து பெற்று மனுத் தாக்கல் செய்திருப்பதாகவும் அதையும் சேர்த்து விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Advertisement