அட, லியோ படத்தில் நடிக்கும் தமிழ் வர்ணனையாளர் – அவரே போட்ட பதிவு இதோ.

0
1350
- Advertisement -

விஜயின் லியோ படத்தில் கிரிக்கெட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தை தொடர்ந்து சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. இந்த படத்தை வம்சி இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர், பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, ஷ்யாம் போன்ற பலர் நடித்து இருந்தார்கள். தமன் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். குடும்ப பின்னணியை மையமாக கொண்ட கதை. இந்த படம் பொங்கல் விருந்தாக ரசிகர்களுக்கு வெளியாகி இருந்தது.

- Advertisement -

விஜய் திரைப்பயணம்:

மேலும், வாரிசு படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும், உலக அளவில் 300 கோடிக்கும் மேல் அதிகமாக வசூல் செய்து இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதனை அடுத்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” என்ற படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். இதற்கு முன் லோகேஷ் அவர்கள் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது.

லியோ படம்:

இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது சென்னையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு இயக்குனர் ரத்னகுமார் மற்றும் இயக்குனர் தீரஜ் வைதி ஆகியோர் கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றி வருகிறார்கள்.

-விளம்பரம்-

படம் குறித்த தகவல்:

இதற்கு முன் இவர்கள் மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் பணியாற்றி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் என்றாலே எல் சி யு என்று கூறுவார்கள். அதனால் தளபதி விஜயின் லியோ படமும் எல்சியுவில் இடம்பெறுமோ? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் லியோ படம் குறித்து ஒரு சூப்பரான அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதாவது, லியோ படத்தில் கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கிறது.

கிரிக்கெட் வர்ணனையாளர்:

தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்பவர் பிரதீப் முத்து. இவர் படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர் நடித்த மீசைய முறுக்கு வீட்ல விசேஷம் போன்ற பட வரிசையில் லியோ படத்தின் பெயரையும் பதிவு செய்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் லியோ படத்தில் முத்து நடிக்கிறார் என்று உறுதி செய்திருக்கின்றனர். தற்போது இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement