‘ஒத்த நொடியில தான் சித்தம் கலங்கிடிச்சே’ – குக்கூ பட நடிகையா இது? வேற லெவல் Transformation

0
406
- Advertisement -

குக்கூ பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சினிமாவில் வெளிவந்த எத்தனையோ படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் காலங்கள் மறந்தாலும் நம் மனதை விட்டு நீங்காத படங்களில் ஒன்று தான் குக்கூ. இந்த படத்தை இயக்குனர் ராஜமுருகன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா நாயர், ஆடுகளம் முருகதாஸ், சோமசுந்தரம் என பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், மாளவிகா நாயர் இருவரும் கண் தெரியாத மாற்று திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவரின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றிருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

- Advertisement -

மாளவிகா நாயர் குறித்த தகவல்:

அந்த அளவிற்கு ஒரு நிஜமான குருடியாக நடித்து நமது கண்களை விழித்து ரசிக்க வைத்தவர் தான் நடிகை மாளவிகா நாயர். இந்த நிலையில் மாளவிகா நாயர் குறித்து பலரும் அறியாத தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மாளவிகா நாயர் டெல்லியை சேர்ந்தவர். இவர் படித்து வளர்ந்தது எல்லாமே கேரளாவில் தான்..படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் ஈடுபட்டார். பின் இவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து இருக்கிறார்.

மாளவிகா நாயர் நடித்த படங்கள்:

அதற்கு முன் இவர் குழந்தை நட்சத்திரமாக தான் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பின்னர் இவர் தனது 13 ,பல்வேறு 2012 இல் மலையாளத்தில் வெளியான உஷாட் ஹோட்டல் என்ற படத்தில் ஒரு சிறு துணை கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மாளவிகா நாயர் நடிக்கும் படம்:

பின்னர் 2013ல் பிளாக் பட்டர்பிளை என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக மாளவிகா நாயர் நடித்தார். அதன் பின் இவர் குக்கூ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்காக அந்த ஆண்டின் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. குக்கூ படத்திற்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. பின் இவர் கீர்த்தி சுரேஷ் நடித்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி என்ற படத்தில் நடித்து இருந்தார்.

மாளவிகா நாயர் லேட்டஸ்ட் புகைப்படம்:

தற்போது இவர் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை அவினாஷ் ஹரிஹரன் இயக்குகிறார். இந்த படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் வீரா, பசுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மாளவிகா நாயர் எப்போதுமே சமூக வலைத்தளத்தில் படு ஆக்டிவாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது மார்டன் உடையில் மாளவிகா நாயர் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் தான் பயங்கர வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலருமே குக்கூ பட நடிகையா இவர்! என்று வியப்பில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement