'குக் வித் கோமாளி' பிரபலம் ஷாலின் ஜோயா நடித்திருக்கும் சீரியல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் நான்கு சீசன்களை கடந்து ‘குக் வித் கோமாளி ’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

மேலும், நான்கு சீசன்களிலும் இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட், தாமு தான் நடுவர்களாக இருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் நிகழ்ச்சியில் இருந்து நடுவர் வெங்கடேஷ் பட், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிறுவனம் Media Masons 10, நிகழ்ச்சியின் இயக்குனர் ஆகியோர் விலகி இருந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. அதன் பின் இந்த நிகழ்ச்சியில் தாமுடன் மற்றொரு நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் களம் இறங்கி இருக்கிறார். பல பிரச்சனைகளுக்கு நடுவில் இந்த 'குக் வித் கோமாளி சீசன் 5' நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி:
இந்த சீசனில் பழைய கோமாளிகளுடன், புதிய கோமாளிகளாக ராமர், ஷப்பனம், அன்ஷிதா, kpy வினோத் ஆகியோர் இணைந்துள்ளனர். அதே போல இந்த சீசனில் போட்டியாளர்களாக ஜோயா, அக்ஷய் கமல், நடிகை திவ்யா துரைசாமி, ஸ்ரீகாந்த் தேவா, பூஜா, ரிவியூவர் இர்பான், சீரியல் நடிகர் வசந்த் வசி, தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே, விடிவி கணேஷ் மற்றும் சீரியல் நடிகை சுஜிதா ஆகியோர் போட்டியாளராக களமிறங்கி இருக்கின்றனர். மேலும், இந்த மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் ஷாலின் ஜோயா.

ஷாலின் ஜோயா குறித்த தகவல்:
இந்த நிகழ்ச்சியில் இவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் இவர் மலையாளம் கலந்து பேசும் தமிழ் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. இதனாலே இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த நிலையில் ஷாலின் ஜோயா குறித்து பலரும் அறியாத தகவலை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக தான் மீடியாவில் நுழைந்தார்.
View this post on Instagram
ஷாலின் ஜோயா நடித்த சீரியல்கள்:
அதிலும் இவர் நடித்த Kudumbayogam என்ற மலையாள சீரியல் மிக பிரபலம். அதற்கு முன் இவர் 2004ம் ஆண்டு மிழிதுறக்கும் போல் என்ற மலையாள சீரியலில் தான் அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து தான் இவர் பல மலையாள சீரியல்களில் நடித்து இருந்தார். அதற்குப்பின் இவர் மலையாளத்தில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கி இருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த வகையில் இவர் சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது 'கண்ணகி' படம் தான்.

ஷாலின் ஜோயா வீடியோ:
இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், அபிராமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர் ஆகியோர் நடிப்பில் வெளிவந்த கண்ணகி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். தற்போது இவரின் குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல் வீடியோ தான் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.






