ஏமாற்றப்பட்ட இலங்கைப் பெண் – சாதிக்க டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கு கைக் குழந்தையுடன் வந்த Single Mother – நெகிழிச்சியான வீடியோ.

0
776
dancejodi
- Advertisement -

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கைக்குழந்தையுடன் ஏமாற்றப்பட்ட இலங்கைப் பெண் சாதிக்க வந்திருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் சமீபகாலமாக சீரியல்களை விட ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிக வரவேற்பு பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். குறிப்பாக டான்ஸ் நிகழ்ச்சிகள் பல சேனல்களில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இந்த நிகழ்ச்சி சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.

- Advertisement -

டான்ஸ் ஜோடி டான்ஸ்:

இந்த நிகழ்ச்சியை கிகி மற்றும் மிர்ச்சி விஜய் தொகுத்து வழங்குகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் சினேகா, பாபா பாஸ்கர் மாஸ்டர், சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகிறார்கள். ஏற்கனவே இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. சமீபத்தில் தான் இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் தொடங்கி இருக்கிறது. இதில் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்:

இதில் பலர் புதுமுகம் என்றே சொல்லலாம். அந்த வகையில் இலங்கை பெண் ஒருவர் இந்த நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இவரை இந்தியர் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். பின் கைக்குழந்தையுடன் இவரை தனியாக விட்டு சென்று விட்டார். அந்த பெண் தனியாக தன்னுடைய வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கின்றார்.

-விளம்பரம்-

சாதிக்க துடிக்கும் இலங்கை பெண்:

அதுமட்டுமில்லாமல் இவர் திருமணத்திற்கு முன்பே நன்றாக நடனம் ஆடுவார். தான் விட்ட நடனத்தில் சாதித்து காட்ட வேண்டும் என்று தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இதுகுறித்த ப்ரோமோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது.

வாழ்த்துகளை தெரிவிக்கும் மக்கள்:

இதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு இலங்கை பெண்ணுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடுவர்கள் முதல் பார்வையாளர்கள் என பலரும் அந்தப் பெண்ணுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது அந்தப் பெண்ணின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement