தமிழ் சினிமாவில் நடிகராகவும், நடன இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் லாரன்ஸ். சினிமாவையும் தாண்டி தொண்டு நிறுவனத்தின் மூலம் நடிகர் லாரன்ஸ் பல்வேறு ஆதரவற்றோர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார். இதனால் இவருக்கு பல்வேறு ரசிகர்களும் இருந்து வருகின்றனர். லாரனஸ் சீமான் லாரன்ஸ் – ஸ்ரீரெட்டி என்று பல்வேறு சர்ச்சைகள் லாரன்ஸை சுற்றி இருந்தது.

என்னதான் லாரன்ஸ் சர்ச்சையில் சிக்கினாலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் உடல் ஊனமுற்ற குழந்தைகளுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அதற்கென தனியாக ஒரு டிரஸ்ட் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு லதா என்ற மனைவியும் ராகவி என்ற மகளும் உள்ளனர். ராகவி 1999ஆம் ஆண்டு பிறந்தார்.

Advertisement

ராகவேந்திரவின் தீவிர பக்தர் ஆன லாரன்ஸ் தனது மகளுக்கு ராகவி என பெயர் வைத்துள்ளார். சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.எஸ் பள்ளியில் தான் படித்துள்ளார் ராகவி. பள்ளியில் படிக்கும்போதே தனது அப்பாவை போலவே அவருடைய ட்ரஸ்ட்டில் மெம்பர் ஆகி அங்கு உள்ள குழந்தைகளுக்கு உதவி செய்து வருகிறார்.

மேலும், 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தால் SRM யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்து, தற்போது அங்கேய படிப்பை நிறைவு செய்து இருக்கிறாராம். தனது அப்பாவின் டான்ஸ் இவருக்கும் மிகவும் பிடிக்குமாம். இதனால் தனது கல்லூரியில் நடந்த விழாவிற்கு அப்பாவை கெஞ்சி வரவழைத்து அந்த ஸ்டேஜில் இருவரும் டான்ஸ் ஆடியுள்ளனர். இவரும் லாரன்ஸை போலவே ஒரு நடன இருக்குனராக வர வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

Advertisement
Advertisement