இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள் அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கிட்டதட்ட 500 திரைகளில் படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். உலகம் முழுவதும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.20 கோடியை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு படத்தின் உள்நாட்டு வசூல் சுமார் 10.50 கோடியாக உள்ளது.

மேலும், சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களாக கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தை இயக்கிய தரணி பேட்டி ஒன்றை அளித்து இருந்திருக்கிறார். கில்லி படம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு சில லாஜிக் மீறல்களையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் இந்த படத்தில் விஜய்யின் கபடி டீம் செமி பைனல் போட்டியில் தோற்று எப்படி பைனலுக்கு சென்றது என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தரணியிடம் கேட்கப்பட்ட போது ‘ அது Best Of Three மேட்ச். படத்தில் புவி ஒரு காட்சியில் அவரது அப்பாவிடம் ‘இதோ பாருங்க இது லீக் மேட்ச்சில் வாங்கியது. இது செமி பைனல்ஸில் வாங்கியது என்று வேலு வாங்கிய கப்பை எல்லாம் காண்பிப்பார்’ என்று கூறியுள்ளார்.

அதே போல அர்ஜுனரு வில்லு பாடலில் விஜய் ஜீப் தூக்கியது குறித்து பேசிய தரணி ‘ இந்த பாட்டில் நீங்க ஜீப்ப தூக்கனும்னு விஜய் சார்கிட்ட சொன்ன போது அவர் அப்படியா பார்த்தார். சாதாரணமாக ஒரு மாருதி காரை தூக்கலாம். ஆனால், கொஞ்சம் எக்ஸ்டீரீமுக்கு போய் ஜீப்பை தூக்கும் படி வைத்தோம் என்று கூறியுள்ளார். மேலும், கில்லி பட கிளைமாக்ஸ்ஸில் விஜய் தனது உடலை தானே சரி செய்துகொள்ளும் காட்சியை துப்பாக்கி படத்தில் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார் தரணி.

Advertisement