'ஜில்லா விட்டு ஜில்லா' பாடலில் வந்த இவங்கதான் விஜய்யின் இந்த படத்தில் அம்மாவாக நடிச்சவங்க.

By Rajkumar · 24/2/2020

சசி குமார் இயக்கத்தில் வைபவ் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'ஈசன்' படத்தில் ஜில்லா விட்டு ஜில்லா' என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது. டான்ஸ் மாஸ்டர் தினேஷ் கொரியாகிராப் செய்த இந்த பாடல் சிறந்த நடன அமைப்பிற்காக பல்வேறு விருதுகளை கூட தட்டி சென்றது. மேலும், இந்த பாடல் முழுவதையும் பாடியடவாரே இந்த பாடலின் இறுதியில் செம ஆட்டம் போட்டு தனது நடனத்தின் மூலம் பலரையும் கவர்ந்த நடிகையின் பெயர் சுஜாதா.

சிறு வயதில் இருந்தே கோடம்பாக்கத்தில் இருந்து வந்துள்ள இவர் சிறு வயது முதலே நடனத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். பின்னர் நடன பள்ளியில் சேர்ந்து பல்வேறு பரிசுகளையும் வாங்கியுள்ளார். அதன் பின்னர் சினிமாவில் குரூப் டான்ஸரா சேர்ந்து ஆடத்தொடங்கினர். முதல்ல, ரகு மாஸ்டர்கிட்ட குரூப் டான்ஸரா சேர்த்துள்ளார்.

இதையும் பாருங்க : அஜித் ஒரே பீட்டர் விட்டாரு. விஜய் அப்படியே பாத்தான். வனிதா சொன்ன செம்ம பிளாஷ் பேக்.

அதன் பின்னர் சுந்தரம் மாஸ்டர்கிட்டசேர்ந்த இவர் சூப்பர் ஸ்டார் நடித்த தளபதி படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ராக்கம்மா... கையத் தட்டு’, ‘காட்டுக்குயிலு’ போன்ற பாடல்களில் குரூப் டான்சராக ஆடியுள்ளார். தொடர்ந்து ரகுராம் மாஸ்டர், சுந்தரம் மாஸ்டர் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் திரிஷாவின் அம்மாவாக நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர், இயக்குனர் கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தஃபா முஸ்தஃபா’ பாடல் மூலமாதான் நான் மாஸ்டர்ஆகியுள்ளார். அதன் மூலமாக இவருக்கு நல்ல பெயர் கிடைக்கவேய தொடர்ந்து ‘பகைவன்’, ‘நேசம்’ தொடங்கி சுமார் 200-க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார் சுஜாதா. தற்போதும் பல்வேறு படங்களில் நடன இயக்குணராக பணியாற்றி வருகிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full