அஜித் ஒரே பீட்டர் விட்டாரு. விஜய் அப்படியே பாத்தான். வனிதா சொன்ன செம்ம பிளாஷ் பேக்.

0
112405
ajith-vanitha
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா என்பது அறிந்த ஒரு விஷயம். விஜய்யின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர் வனிதா. அதற்கு பின் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். பின் படங்களை தயாரிக்க ஆரம்பித்தார். ஆனால், அதிலும் சில தோல்விகள் ஏற்பட்டது. கடந்த ஆண்டு வனிதா சொத்தைப் பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டு பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டார். இதனால் கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

-விளம்பரம்-

வீடியோவில் 15:50 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

அதற்கு பிறகு தான் வனிதா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றததற்கு முக்கிய காரணமே நம்ம வனிதா தான். பிக் பாஸ் சீசன் 3 இன் வில்லி ஆகவே வனிதா அவதாரம் எடுத்தார். பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா சீரியல்களிலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று வருகிறார்.

வனிதா நடிகையாக அறிமுகமானது விஜய் நடிப்பில் வெளியான ‘சந்திரலேகா ‘ படத்தின் மூலம் தான். அதன் பின்னர் ராஜ் கிரண் நடிப்பில் மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திருமணம் ஆகிவிட்டு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வணிதாவிடம், அஜித் புகைப்படம் காண்பித்து கேள்வி கேட்ட போது, என்னுடைய படத்தில் பூஜையின்போது அஜித் வந்திருந்தார். பூஜைக்கு எப்போதும்போல டிப்டாப்பாக கோட் சூட் போட்டுக்கொண்டு, டக் இன் ஷர்ட், பெல்ட் பார்மல் ஷூ என்று டிப் டாப்பாக வந்து இருந்தார். அப்போது அவர் மிகவும் இளமையாகவும் ஹாண்ட்சமாகவும் இருந்தார். மேலும் அவரே எங்களிடம் வந்து அவரைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-
Image result for Vanitha Ajith

மேலும், என்னுடைய அம்மாவிடம் அவர் தன்னை பற்றி அறிமுகம் செய்து வைத்துக் கொண்டார். என் அம்மா ஒரு பீட்டர் அவர் ஒரு பீட்டர் அதனால் என் அம்மா உடன் அமர்ந்து ஒரே இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தார். இதனால் விஜய் அப்படியே பாத்தான், நான் உடனே என்ன ஒரு பீட்டர் தாங்க முடியல என்று கூறினேன். அப்போது நாங்கள் எல்லாருமே ஒரே அளவு வயது உடையவர்கள் என்பதால் நாங்கள் ஒருவரை ஒருவர் காலாய்த்துக் கொள்வோம்.மேலும், திருமணத்திற்கு முன்பாகவே ஷாலினி என்னுடைய நெருங்கிய தோழி. அவர் மூலமாக நான் அஜித் வீட்டிற்கு எல்லாம் கூட சென்றிருக்கிறேன்.

மேலும், என்னுடைய திருமணத்தின் போது அவரின் சகோதரரின் திருமணம் நடைபெற்றது. இதனால் என்னுடைய திருமணத்திற்கு அவர் வர முடியாமல் போனது ஆனால், திருமணத்திற்கு பின்னர் அஜித், ஷாலினி என்று அவர்கள் குடும்பத்தார் அனைவருமே எங்கள் வீட்டிற்கு வந்து ஆசிர்வாதம் செய்தனர். அந்த அளவிற்கு அஜித் ஒரு சாதாரணமான மனிதர், நல்ல கணவர், நல்ல தந்தை. உண்மையாக இருக்கும் ஒரு சில மனிதர்களில் அவரும் ஒருவர். இன்று நீங்கள் தல என்று எல்லோரும் சொல்கிறார்கள் ஆனால் எனக்கு அவரை அஜித் தான் தெரியும் என்று கூறியுள்ளார் வனிதா

Advertisement