விஜயை காப்பி அடித்து ரஜினியாக மாற்றிய ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.!

0
817
Vijay-Rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருகிறார். ஆனால் இந்தத் தலைமுறையில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக கருதப்படுபவர் இளையதளபதி விஜய் தான். விஜய்யின் ரசிகர்கள் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

மேலும், இந்த படத்தின் போஸ்டர் இந்தியில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு படத்தின் ஒரு போஸ்டர் போலவே இருக்கிறது என்று பேச்சு நிலவியது. ஆனால், தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எந்த ஒரு படத்தில் இருந்தும் காப்பி அடிக்கவில்லை என்று இந்த போஸ்டரை உருவாக்கிய போஸ்டர் வடிவமைப்பாளரும் கூறி இருந்தார்.

இது ஒருபுறமிருக்க சமீபத்தில் ரஜினி ரசிகர்கள் சிலர் தர்பார் படத்தின் போஸ்டர் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பரவி வருகிறது. அதில் குளிங் கிளாஸை பிடித்தபடி ஸ்டைலாக உள்ள பிரச்சினை ஆனால் அந்த போஸ் விஜய் நடித்த தெறி படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement