மீண்டும் இந்தி வில்லனை இறக்குமதி செய்த்துள்ள முருகதாஸ்.! தர்பாரின் மாஸ் தகவல்.!

0
993
Darbar
- Advertisement -

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ரஜினியின் 167 வது படமான இந்த படத்திற்கு ‘தர்பார்’ என்று பெயர் வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முதன்முறையாக நயன்தாரா நடிக்கிறார்.

-விளம்பரம்-

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்டை படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ரஜினி படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத்.

- Advertisement -

இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிகர் ப்ரதீக் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் நடிகர் பிரதீக் வில்லனுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதீக் நடித்த பாகி 2 படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்துள்ளார் என்றும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for PrateikBabbar

மேலும், பிரதீக் தனது தமிழ்ப் பட அறிமுகம் குறித்து கூறுகையில்,”ரஜினி போன்ற ஒரு சகாப்த நடிகருடன் நடிக்க துடியாய்த் துடித்த்துக்கொண்டிருக்கிறேன். இப்படத்துக்காக நான் எனது 200 சதவிகித உழைப்பைக் கொட்டுவேன்” என்று பரவசமடந்திருக்கிறார்.

-விளம்பரம்-


Advertisement