தர்பார் படத்தின் போஸ்டர்.! அர்னால்ட் படத்தை காபி அடித்த முருகதாஸ்.!

0
689
Darbar
- Advertisement -

பேட்ட படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நாளை (ஏப்ரல் 10) மும்பையில் துவங்க உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

-விளம்பரம்-
darbar-movie-poster-copied-from-hollywood

முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள திரைப்படத்துக்கு தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது.  பெரிய பெரிய துப்பாக்கிகள், போலீஸ் சீருடை, போலீஸ் பெல்ட், துப்பாக்கிக்குண்டு, கைவிலங்கு, மோப்ப நாய் என முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக போஸ்டர் அமைந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போஸ்டர் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நடிப்பில் 2017ல் வெளியான’கில்லிங் கந்தர்’படத்தின் போஸ்டர் போல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இரண்டு போஸ்டர்களிலும் உள்ள துப்பாக்கிகள், நடுவில் ஹீரோ என்பது போன்ற பொதுவான விஷயங்களை அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள்.

ஏற்கனவே சர்கார் படத்தின் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய முருகதாஸ் தற்போது தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே மாட்டியுள்ளார். எது எப்படியோ போஸ்டர் நன்றாக இருப்பதாக மற்றொரு தரப்பினர் விமர்சனங்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement