தர்ஷா தான் அப்படி சொல்ல சொன்னார் – சதிஷ் வெளியிட்ட வீடியோ. உண்மையை கூறி வெளுத்து வாங்கிய தர்ஷா.

0
504
darsha
- Advertisement -

தர்ஷா சொல்லித்தான் மேடையில் அப்படி பேசியதாக சதிஷ் வீடியோ வெளியிட்டு டெலீட் செய்த நிலையில் தற்போது சதிஷ்ஷின் பதிலால் கடுப்பாகி இருக்கிறார் தர்ஷா குப்தா. மொட்டை மாடி போட்டோ ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும் இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

பின் மின்னலே, செந்தூரப்பூவே போன்ற தொடர்களில் நடித்து இருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை. இதை தொடர்ந்து சமூக வலைதளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமானார். மேலும், குக்கு வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவர் ருத்ரதாண்டவம் படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

- Advertisement -

சதிஷ்ஷின் சர்ச்சை பேச்சு :

இப்படி ஒரு நிலையில் இவர் ‘Oh My Ghosht’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல ஆபாச நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், காமெடி நடிகர் சதீஷ், டிக் டாக் புகழ் ஜி பி முத்து உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய சதிஷ் ‘சன்னி லியோன் பாம்பேவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

குவிந்த கண்டன குரல்கள் :

அவங்க எப்படி டிரஸ் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தீர்கள். கோயம்புத்தூரில் இருந்து ஒரு பொண்ணு வந்திருக்கிறது ‘தர்ஷா குப்தா’ அவங்க எப்படி நம்ம கலாச்சாரத்தில் வந்திருக்கிறார்கள் என்பதை சும்மா சொன்னேன்’ என்று தர்ஷா குப்தாவை கலாய்த்து இருக்கிறார். இவரின் இந்த பேச்சைக் கண்டு நிட்டிசன்கள் பலரும் திட்டி தீர்த்து வருகிறார்கள். பின்னணி பாடகியான சின்மயி, பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ், மூடர் கூடம் நவீன் என்று பலர் இந்த வீடியோ குறித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து இருந்தனர்.

-விளம்பரம்-

சதீஷ் வெளியிட்ட வீடியோ :

இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சதீஷ், தர்ஷா குப்தா எனது பக்கத்தில் அமர்ந்து நான் இன்னைக்கு சன்னி லியோன் விட மார்டனா ட்ரெஸ் பன்னிட்டு வந்துர்கேன்.. அவங்க எப்படி வராங்கனு பாப்போம்னு சொன்னாங்க. பாத்தா சன்னி லியோன் பட்டு புடவை கட்டிட்டு வந்துர்ந்தாங்க அத பாத்தா தர்ஷா அப்செட் ஆகிட்டு சொன்னாங்க.. என்னங்க நான் இப்படி வந்துர்கன் அவங்க அப்படி வந்துட்டாங்க நான் அத பாத்து அப்செட் ஆகிட்டனு நீங்க ஸ்டேஜ்ல பேசும்போது சொல்லுங்க என்று தர்ஷா சொன்னதாக கூறி இருந்தார்.

வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா :

ஆனால், இந்த வீடியோவை சில நிமிடங்களில் தன் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார் சதிஷ். இப்படி ஒரு நிலையில் சதிஷ்ஷின் இந்த வீடியோவிற்கு கீழ் கமண்ட் செய்து இருக்கும் தர்ஷா குப்தா ‘நான் தான் அப்படி சொல்ல சொன்னேன் என்று இப்படி என் மீது திருப்பிவிடுவது நல்லா இருக்கா சதிஷ் ? இது ரொம்ப விசித்திரமா இருக்கு. யாரவது என்ன பத்தி மேடைல நீங்க அசிங்கமா பேசுங்கன்னு சொல்வாங்களா ? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ காயமாதான் இருந்தது. ஆனா, பெருசா காட்டிக்ல. ஆனா இப்போ இப்படி சொல்றது நல்லா இல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement