தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தர்ஷா குப்தா பதிவிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மொட்டை மாடி என்ற சீரியல் ஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் சின்னத்திரை சீரியல் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமாகி இருந்தார். அதிலும், இவர் ஜி தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி இருந்த “முள்ளும் மலரும்” என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின் சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த “மின்னலே” என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் முடிவடைந்த செந்தூரப்பூவே தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்திருந்தார். இப்படி இத்தனை நாடகத்தில் இவர் நடித்தாலும் மக்கள் மத்தியில் பெரியதாக பிரபலம் அடையவில்லை.
தர்ஷா சின்னத்திரை பயணம்:
ஆகவே, சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை என பல பேர் பயன் படுத்திய யுத்தியை தான் தர்ஷா கையாண்டு இருந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பதால் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் தான் இவர் பிரபலமாகி இருக்கிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.
View this post on Instagram
இப்படத்தில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சதீஸ், ஜி பி முத்து உள்பட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திலும் கவர்ச்சியாக நடித்துள்ள தர்ஷா குப்தா படத்தின் வெளியிட்டின் போது செய்தியார்கள் சிலர் ஏன் அதிகமாக கவர்ச்சி காட்டுகிறீர்கள்? உங்களுக்கு கவர்ச்சி மட்டும்தான் தெரியுமா? என்ற கேள்விகளை எழுப்பி, கவர்ச்சியை மட்டும் காட்டாதிர்கள் உங்களுடைய திறமையையும் காட்டுங்கள் என்று கூறியிருந்தனர்.
தர்ஷா குப்தா பகிர்ந்த வீடியோ :
இது குறித்து படத்தின் நாயகனான சதீஸ் உட்பட பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறியிருந்தனர். இந்த நிலையில் "ஓ மை கோஸ்ட்" படப்பிடிப்பின் போது அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் வீடியோ ஒன்றினை தர்ஷா குப்தா பகிர்ந்து அதில் கவர்ச்சியை தாண்டி உங்காளுடைய உழைப்பையும், திறமையையும் காட்டுங்கள் என்றும், இந்த விடியோவை தான் எல்லோருக்கும் சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் தர்ஷா குப்தா அந்த பதிவில், அந்த வீடியோவில் எடுக்கப்பட்ட காட்சி காலையில் இருந்து மாலை 6 மணிவரை சாப்பிடாமலும், தண்ணீர் கூட குடிக்காமலும் எடுக்கப்பட்டது என்றும் கூறி,கடின உழைப்பில்லாமல் எதுவும் கிடைத்து விடாது என்று அந்த வீடியோ பதிவின் கீழ் குறிப்பிட்டுள்ளர். இந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.






