கடைசியாக பேட்டியெடுத்தால் இந்த நடிகரை தான் எடுப்பேன்.! டிடியின் பர்த் டே விஷ்.!

0
791
Dhivya-dharshini

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவருக்கென்று பல்வேறு ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர். சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தொகுப்பாளினியாக இருந்த தற்போது நடிகையாக மாறிவிட்டார்.

அவரது பர்சனல் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும் அவற்றை மறந்துவிட்டு சற்று மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிடி தொகுப்பாளினியாக 20 ஆண்டுகளை கடந்துள்ளார். இதனால் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இதுவரை பல்வேறு நடிகர் நடிகைகளை பேட்டி கண்ட டிடி இன்று (பிப்ரவரி 17 ) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் பிரபல தனியார் யூடுயூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பல்வேறு கேள்விக்கு பதிலிளித்தார் டிடி.

அப்போது நீங்கள் செய்யும் கடைசி நிகழ்ச்சி இது என்றால் யாரை பேட்டி காண விரும்புகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு டிடி சற்றும் யோசிக்காமல் அஜித் என்றார். தற்போது டிடி விக்ரம் நடித்து வரும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement