நீச்சல் உடையல் இந்த வீடியோவ போட ரொம்ப யோசிச்சேன், ஆனால், அப்புறம் – டிடி பதிவிட்ட வீடியோ பாராட்டிய குமரன்.

0
16347
dd
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

-விளம்பரம்-

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர்.அதே போல travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மாலத்தீவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர் மாலத்தீவில் பிகினி போட்டோ எல்லாம் கிடையாது என்று கூறி இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்ட டிடி, ரொம்ப யோசிச்சேன். நீச்சல் உடையில் ரீல் போட்டால் எல்லாரும் என்ன சொல்லுவாங்கனு ? அப்புறம் தான் புரிஞ்சது இந்த இடத்துக்கு வர்ரதுக்கு நான் 23 வருஷம் கஷ்டப்பட்டு இருக்கேன். எனக்கு பிடிச்சத நான் செய்றேன் என்று குறிப்பிட்டிருந்தார். டிடியின் இந்த பதிவை பார்த்த குமரன், உன்னுடைய கருத்தை லவ் பன்றேன். உன்னை சந்தோசப்படுத்தும் விஷயத்தை செய் டிடி என்று பதிவிட அதற்கு டிடியும் நன்றி பேபி என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement