டிடியின் அக்கா பிரியதர்ஷினிக்கு மீசை முளைத்துள்ள அளவிற்கு இவ்ளோ பெரிய மகனா ? பாத்தா நம்பவே மாடீங்க.

0
2091
priyadharshini
- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் எவ்வளவு இடம் கிடைக்கிறதோ அதே அளவுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் காலம் கடந்தாலும் மக்கள் மத்தியில் என்றென்றும் இடம்பிடித்திருக்கும் தொகுப்பாளர்கள் என்றால் சிலர் தான். அந்த வரிசையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. அதோடு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டிடி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவிற்கு சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பிரபலமானவர் திவ்யதர்ஷினி.

-விளம்பரம்-

இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது படங்களில் நடித்துக் கொண்டும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். இவருடைய அக்கா தான் பிரியதர்ஷினி. இவரும் மீடியா துறையில் மிகப் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர். தமிழ் திரை உலகில் தாவணிக் கனவுகள், இதயகோயில் மற்றும் மலையாளத்தில் கூட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

ப்ரியதர்ஷினி நடித்த படங்கள்:

இதனைத் தொடர்ந்து தமிழில் ரகுமானின் ‘கல்கி’ என்ற படத்தில் கதாநாயகியின் தோழியாக நடித்திருந்தார். அதன் பிறகு ‘ஜித்தன்’ ரமேஷின் ‘புலி வருது’, பரத்தின் ‘காளிதாஸ்’ ஆகிய இரண்டு தமிழ் படங்களிலும் நடித்தார். பின் சினிமாவில் வரவேற்பு கிடைத்தவுடன் ‘அக்னிப் பரீட்சை, எத்தனை மனிதர்கள், விழுதுகள், கனவுகள் இலவசம், கோலங்கள், வசந்தம், மை டியர் பூதம், ரேகா IPS, தமிழ் கடவுள் முருகன்’ என சூப்பர் ஹிட் டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியதர்ஷினி.

ப்ரியதர்ஷினி நடித்த சீரியல்கள்:

தற்போது ‘ஹாட் & கூல் மீடியா’ என்ற யூ-டியூப் சேனலில் தொடர்ந்து திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார் ப்ரியதர்ஷினி. இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிகை மட்டுமில்லாமல் டான்ஸரும் ஆவார். மானாட மயிலாட, பாய்ஸ் VS கேர்ள்ஸ் போன்ற பல நடன நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இதனிடையே பிரியதர்ஷினி, ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

ப்ரியதர்ஷினி குடும்பம்:

இவர்களுக்கு ரிஷி என்ற மகனும் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார் பிரியதர்ஷினி. தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நம்ம வீட்டு மீனாட்சி என்ற தொடரில் கதாநாயகியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவருக்கு மீண்டும் ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது என்று சொல்லலாம். இந்த சீரியலில் இவர் பாசிட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ப்ரியதர்ஷினி குடும்ப புகைப்படம்:

இந்நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் பிரியதர்ஷினி தன் தங்கையுடன், அம்மா, தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அதிகம் பார்த்திருப்போம். தற்போது பிரியதர்ஷன் தன் கணவர் ரமணா மற்றும் மகனும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஏன்னா, இவருடைய மகன் புகைப்படம் பார்த்து பலரும் வியந்து விட்டார்கள். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா! எங்களை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அந்த புகைப்படத்தை வைரலாகியும் வருகிறார்கள்.

Advertisement