ஃபிட்னஸ் சேலஞ்ச்..! பிரபல நடிகையின் வீடியோவை கிண்டல் செய்த ரசிகர்கள்.! வீடியோ உள்ளே

0
760
Actress-deepika
- Advertisement -

பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன் தனது உடலை மிகவும் பிட்டகா வைத்திருக்க பல்வேறு உடற்பயிற்சிகளை செய்துவருகிறார். மேலும் தனது உடலை மிகவும் சௌகர்யமாக வைத்துக்கொள்ள அவர் செய்யும் பல பயிற்சி விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

- Advertisement -

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்து, அதனை வீடியோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் விராட் கோலி ,பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவல், பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோசன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

அந்த பதிவியில் நீங்கள் எப்படி உங்கள் உடலை பிட்டாக வைத்திருக்கிறீர்கள் என்று வீடியோ பதிவிடுங்கள் என்று, டேக் செய்த அவர்கள் மூவருக்கும் சவால் ஒன்றை விடுத்திருந்தார். இதனைக்கண்டு சவாலை ஏற்றுக் கொண்ட சைனா நேவால் தான் உடற் பயிற்சி செய்த விடியோவை வெளியிட்டு , தீபகா படுகோனை டேக் செய்தார்.தற்போது அந்த சவாலை ஏற்று தான் உடற்பயிற்சி செய்த விடியோவை ட்விட்டரில் பதிவிட்ட தீபிகா படுகோன், ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆலகியுள்ளார்.

-விளம்பரம்-

ஏனெனில் அந்த பிட்னெஸ் சவாலை சீரியஸாக எடுக்காதது போல ஏதோ பூங்கா ஒன்றில் ஓடும் வீடியோ பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் தீபிகா படுகோன். இதனை கண்ட ரசிகர்கள் இதை தான் நீங்கள் ஓட்டம் என்று அழைப்பீர்களா. உங்கள் ரசிகர்களை இப்படி ஏமாற்றாதீர்கள் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.இன்னும் சிலரோ, இது நீங்கள் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள பழைய வீடியோ பதிவு தானே. புதிதாக ஏதாவது செய்து காட்டுங்கள் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

Advertisement