எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய கடும் உழைப்பினால் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விஜய் சேதுபதி. தற்போது இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது.

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. இதனை அடுத்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருந்த மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான மைக்கல் பதிலும் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அதோடு பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருடன் இணைந்து Frazi எந்த இனைய தொடரிலும் நடித்திருக்கிறார்.

Advertisement

மகா காந்தி – விஜய் சேதுபதி மோதல் வழக்கு :

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பெங்களூரில் விமான நிலையத்தில் மற்றொரு நடிகரான மகா காந்தி என்பவர் உடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் விஜய் சேதுபதியின் உதவியாளர் ஜான்சனை நடிகர் மகா காந்தி என்பவர் தாக்கியதாக காவல்துறை துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது. இது தொடர்பாக மகா காந்தி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனு ரத்ததான நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் விசாரணை :

இந்நிலையில் இது தொடர்பான தகவல்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது கிடைத்துள்ள தகவலின் படி மாக காந்தியின் மனுவை விசாரித்த மகேஸ்வரி மற்றும், பிபி சஞ்சய் குமார் அடங்கிய நீதிபதிகள் குழு விஜய் சேதுபதியின் மீது உள்ள கிரிமினல் அவதூறு தவிர மற்ற அணைத்து குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்தது. விஜய் சேதுபதி பிரபலமான நடிகர், ஆனால் எதிர்த்தரப்பு மனுதாரர் குடிபோதையில் இருந்ததால் கீழ்த்தரமான நடந்தை அவரிடம் இருந்ததாக விஜய் சேதுபதியின் தரப்பில் இருந்து குற்றம் சாட்டப்பட்டது.

Advertisement

விஜய் சேதுபதிக்கு அறிவுரை :

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய நீதிபதி தினேஷ் மகேஸ்வரி “விஜய் சேதுபதி பிரபலமான நடிகராக இருப்பதினால் உங்களுடைய நடத்தைகள் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார். மேலும் இந்த விவகாரம் பேசி முடித்துக்கொள்ளும் விஷயம் தான் எனவே ஈகோவை மறந்து விட்டு சுயமரியாதையை பேணுவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறினார்.

Advertisement

மத்தியஸ்தம் மூலம் தீர்வு காண அறிவுரை :

மேலும் இரண்டு தரப்பின் மீதும் தவறு இருப்பதினால் இந்த வழக்கு மத்தியஸ்தம் செய்து கொள்வதற்கு தகுதியானது. எனவே இரு தரப்பும் பேசி முடித்து கொள்ளும் படி அறிவுரை கூறினார். இதனையதடுத்து இரு தரப்பும் சமரசம் செய்து கொள்வதாக தெரிவித்த நிலையில் இந்த வழக்கு வரும் மார்ச் மாதம் 2ஆம் தேதியன்று உச்சநீதி மன்றத்தில் மத்தியஸ்த குழுவில் இரண்டு தரப்பும் ஆஜராகி இந்த பிரச்சனையை முடித்துக்கொள்ளும் படியும், ஹோலியை மகிச்சியாக கொண்டாடும் படியும் அறிவுரை கூறியது நீதிபதிகள் குழு.

Advertisement