பேபி சாரா செய்திருக்கும் செயலால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள ரசிகர்கள் – காரணம் இதுதான்?

0
801
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனவோ குழந்தை நட்சத்திரங்கள் வந்து சென்றாலும் ரசிகர்கள் மனதில் ஒரு சிலர் மட்டுமே நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் பேபி சாராவும் ஒருவர். தமிழில் விக்ரம் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான “தெய்வத்திருமகள் ” படத்தில் விக்ரமின் மகளாக நடித்த குழந்தையை யாராலும் மறக்க முடியாது. அந்த படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பேபி சாரா தமிழ் ரசிகர்கள் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டார்.

-விளம்பரம்-

இந்த படத்தில் சாரா மற்றும் விக்ரம் இருவருக்கும் இடையிலான அப்பா மகள் பாசம் பார்ப்பதற்கு நிஜமான அப்பா மகளை போன்ற ஒரு எண்ணத்தை உருவாக்கியது. இந்த படத்தின் மூலம் பேபி சாராவிற்கு பல்வேறு ரசிகர் பட்டாளம் உருவாகியது. இவருக்கு பின்னர் எத்தனையோ குழந்தை நட்சித்திரங்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் இவருக்கு கிடைத்த வரவேற்பை போல யாருக்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

நடித்த படங்கள் :

“தெய்வத்திருமகள் ” படத்திற்கு பிறகு தமிழில் “சித்திரையில் நிலாச்சோறு, சைவம்,விழித்திரு” போன்ற படங்களில் நடித்திருந்தார் பேபி சாரா. தற்போது ஹலிதா சமீம் என்ற பெண் இயக்குனர் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பேபி சாரா. இயக்குனர் ஹலிதா சமீம் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த “பூவரசம் பீப்பி ” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்நிலையில் இவர் சில்லு கருப்பட்டி என்ற படத்தை இயக்கியிருந்தார் இப்படத்தில் சாரா முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

கொட்டேஷன் கேங் :

மேலும் இப்படத்தை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல படங்களில் நடித்திருக்கிறார். அதோடு சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும் படமாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கூட இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருருந்தார் என்பது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து கொட்டேஷன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிர்ச்சியில் ரசிகர்கள் :

இப்படி பட்ட நிலயில் தான் கொட்டேஷன் கேங் என்ற படத்தின் முதல் பார்வை கடந்த 18ஆம் தேதி வெளியாகி இருந்தது. இந்த வீடியோவில் சாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். அதவது அவர் புகைப்பிடிக்கும் படி சில காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம பேபி சாராவா இப்படி என்று ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளார். மேலும் இப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரமாகவும், பிரியாமணி, ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், சாரா அர்ஜுன், விவேக் கண்ணன் போன்றவர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Advertisement