தன் தங்கையுடன் ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்ட அண்ணியார் - என்னப்பா அவர மாதிரியே இருக்காரு.

By Rajkumar · 21/11/2021

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

https://twitter.com/chettyrajubhai/status/1462295111736254469

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அண்ணியாருக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருக்கிறார்.

இதையும் பாருங்க : கோலகலமாக நடந்த சித்து - ஸ்ரேயாவின் திருமணம் - வெளியான புகைப்படங்கள் இதோ.

ஆனால் இது வரை அவரை பெரிதாக மீடியா கண்களுக்கு அவ்வளவாக அண்ணியார் காயத்ரி காட்டியது கிடையாது. அவரது மகளின் பெயர் பூஜா. தெய்வமகள் சீரியலுக்கு பின்னர் காயத்ரியை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை. ஆனாலும், இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் அண்ணியார்.

ரேகாவின் மகள்

மேலும்,அடிக்கடி பல ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட தனது மகளுடன் ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் தன் சகோதரியுடன் ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரது சகோதரி அச்சு அசலாக அவரை போலவே இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full