கோலகலமாக நடந்த சித்து – ஸ்ரேயாவின் திருமணம் – வெளியான புகைப்படங்கள் இதோ.

0
733
sidhu
- Advertisement -

திருமணம் சீரியல் புகழ் சித்து – ஸ்ரேயா ஜோடிகள் தங்கள் திருமணத்தை முடித்து இருக்கின்றனர். கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த திருமணம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அந்த தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து மலர்ந்தது.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர்களுடைய காதல் குறித்து சோசியல் மீடியாவில் பல கேள்விகளும், கருத்துக்களும் எழுந்து இருந்தது. ஆனால், இவர்கள் இருவரும் அதற்கு மௌனமாகவே இருந்தனர். மேலும், திருமணம் சீரியல் மூலம் இவர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதால் இவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கிளப்புகள் தொடங்கியது. அதோடு சோசியல் மீடியாவில் இவர்களுடைய ஜோடி புகைப்படங்கள் தான் அதிகமாக வைரல் ஆகி இருந்தது.

இதையும் பாருங்க : அழகி படத்தில் சிறு வயது பார்த்திபனாக நடித்த நடிகரை ஞாபகம் இருக்கா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.

- Advertisement -

அதற்கு பிறகு தான் இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படையாக ரசிகர்களுக்கு அறிவித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் லிவிங் டுகெதரில் இருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்திருந்தன. தற்போது சித்து அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்ற ராஜா ராணி 2 சீரியலில் சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் கதாநாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். மேலும், எப்போது சித்து–ஸ்ரேயா கல்யாணம்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சமீபத்தில் இவர்களின் திருமண நலங்கு விழாவின் போது எடுத்த வீடியோவை திடீரென்று தங்கள் யூடுயூப் பக்கத்தில் வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இந்த நிலையில் இன்று இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement