ஹீரோயினாக அறிமுகமாகிய தெய்வ மகள் அண்ணியாரின் மகள் - ப்பா, வேற லெவல்ல இருக்காரே இப்போ.

By Rajkumar · 15/10/2021

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர்.

இந்த சீரியலில் அண்ணியார் காயத்ரியாக நடித்தவர் சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.அண்ணியாருக்கு தோலுக்கு மேல் வளர்ந்த ஒரு மகளும் இருக்கிறார்.

இதையும் பாருங்க : படு கோலாகளமாக நடந்துள்ள திருமணம் - வைரலாகும் பாவனியின் திருமண வீடியோ.

ஆனால் இது வரை அவரை பெரிதாக மீடியா கண்களுக்கு அவ்வளவாக அண்ணியார் காயத்ரி காட்டியது கிடையாது. அவரது மகளின் பெயர் பூஜா. தெய்வமகள் சீரியலுக்கு பின்னர் காயத்ரியை வேறு எந்த தொடரிலும் காண முடியவில்லை. ஆனாலும், இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து தன்னுடைய இருப்பை உறுதி செய்து கொண்டே இருக்கிறார் அண்ணியார்.

அந்த வகையில், சமீபத்தில் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். அதில் தன்னுடைய மகளை பெரிய திரையில் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். மேலும், பூஜாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவர் மாடர்ன் உடைகளில் லொடுத்துள்ள போஸை நீங்களே பாருங்கள்.

behindtalkies AMP · Quick view
View full