ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் நேற்று மாலை கோலாகலமாக துவங்கியது கடந்த சீசனில் இந்த சீசனில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி இருக்கின்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான ரகங்களை விட முகம்தெரியாத பல்வேறு நபர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நபர்கள் என்றால் அது விஜய் டிவி பிரியங்கா, நாட்டுப்புற பாடகி சின்ன பொண்ணு, கனா காணும் சீரியல் நடிகர் ராஜீவ் ஜெயமோகன், இமான் அண்ணாச்சி என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும்.
அந்த வகையில் பவானி ரெட்டியும் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு நடிகை தான்.பவானிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவருடன் ஒரு சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் மகிழ்ச்சியாகி வாழ்ந்து வந்த இருவரது வாழ்க்கையிலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திருமணமாந 8 மாதத்தில் 2017 மே மாதம் அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் கணவர் பிரதீப்.
கடந்து வந்த பாதை டாஸ்கில் கூட தன் கணவர் குறித்து உருக்கமாக பேசிய பவானி, தன் கணவர் இறந்த பின் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள இருந்ததாகவும் ஆனால், அது நடக்கவில்லை என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமூக வலைதளத்தில் பலரும் பவானிக்கு இரண்டாம் திருமணம் நடந்துவிட்டதாக விமர்சனம் செய்தனர்.
இதுகுறித்து விளக்கமளித்த அவரின் அக்கா, பவானி அவரது கணவரின் இருப்பிற்கு பின் ஒருவரை விரும்பியது உண்மை தான். ஆனால், அவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக பரஸ்பரமாக பிரிந்துவிட்டனர் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பவானியின் திருமண வீடியோ வைரலாக பரவி வருகிறது.