23 ஆண்டுகளுக்கு முன் ஹீரோயின் – தான் நடித்த முதல் சீரியலின் முதல் எபிசோட் வீடியோவை பகிர்ந்த அண்ணியார். எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
2941
deivamagal
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சில் சீரியலின் முன்னோடியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில், சன் டிவியில் 3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள். இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்பபட்டது ஆச்சர்யம் இல்லை. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் கிருஷ்ணாவும் – வாணி போஜனும் நடித்து இருந்தார்கள். இவர்களுக்கு நிகராக இந்த தொடரில் பிரபலமடைந்தது சீரியலில் அன்னியார் என்னும் கதாபாத்திரத்தை நடித்த நடிகை ரேகா தான்.

-விளம்பரம்-

இவர் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் இவருக்கு புகழை பல தெய்வமகள் சீரியல் தான். இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வசந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தெய்வ மகள் சீரியலுக்கு பின்னர் நந்தினி சீரியலில் நடித்தார். ஆனால், அந்த தொடருக்கு பின்னர் வேறு எந்த் தொடரிலும் நடிக்கவில்லை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கன்னட சீரியல் ஒன்றில் நாயகியாக நடித்துள்ளார். 1998 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது. இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நடித்த முதல் எபிசோடின் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ரேகா. மேலும், இந்த வீடியோ ‘பொம்மி டால்கிஸ்’ என்ற யூடுப் பக்கத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர், குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் வர வேண்டும் என்று பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசி இருந்தார். அதே போல இவர் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொடர் மூலம் மீண்டும் சீரியலில் ரீ – என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement