அட கடவுளே, மேக்கப் இல்லாமல் வாணி போஜன் எப்படி இருக்காரு பாருங்க. அலறிய ஆர்மி.

0
132521
vani-bhojan

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் “சத்யா” என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.

நடிகை வாணி போஜன் முதலில் மாயா என்ற தொடரின் மூலம் தான் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளதாக கூறி உள்ளார். மேலும்,தற்போது நடிகர் வைபவ் நடிக்கும் புதிய படம் ஒன்றிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் வாணி போஜன்.

- Advertisement -

தெலுங்கு நடிகர் விஜய் தேவர் கொண்டா தயாரிக்கும் முதல் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய் தேவர் கொண்டா நடித்து சூப்பர் ஹிட்டான ‘பெல்லி சூப்புடு’ என்ற படத்தை இயக்கிய தருண் பாஸ்கர் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. தற்போது அசோக் செல்வன் நடித்து வரும் ‘ஒ மை கடவுளே’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். சமூக வலைதளத்தில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்களும் இருக்கின்றனர். மேலும், சீரியல் நடிகைக்கு ஆர்மி துவங்கப்பட்டது என்றால் அது வாணி போஜனுக்கு தான்.

View image on Twitter
நடிகர் அசோக் செல்வனுடன் வாணி போஜன்

எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில். சமீபத்தில் நடிகை வாணி போஜன் தனது ரசிகையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மேக்கப் இல்லாமல் மிகவும் பொலிவிழந்து காணப்படும் வாணி போஜனின் கண்ணுக்கு கருவளையமும் சூழ்ந்து கிடக்கிறது. இந்த புகைப்படத்தை பார்த்த வாணி போஜனின் ஆர்மி மேக்கப் இல்லாமல் வாணி போஜன் இப்படி இருக்காரு என்று அலறி போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement