Short Flimக்கு உதவி கேட்டவங்க, படம் எடுத்ததும் மறந்துட்டாங்க – லவ் டுடே இயக்குனர் குறித்து டெல்லி கணேஷ்.

0
563
- Advertisement -

இயக்குனர் பிரதீப் ரங்கராஜன் குறித்து நடிகர் டெல்லி கணேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனராக வளர்ந்து கொண்டிருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவர் கோமாளி படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். ஆனால், இவர் முதலில் குறும்படம் தான் எடுத்து இருந்தார். அதன் பின் தான் கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் “கோமாளி” படம் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், ரீதிகா மோகன், கே. எஸ். ரவிக்குமார், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். படத்தில் 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த 90s இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருந்தார் இயக்குனர். இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

- Advertisement -

லவ் டுடே படம்:

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.

வீடியோவில் 16 நிமிடத்தில் பார்க்கவும் :

டெல்லி கணேஷ் அளித்த பேட்டி:

இந்த படம் விமர்சன ரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் டெல்லி கணேஷ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, ஷார்ட் பிலிம் பண்ணனும் என்று உதவி கேட்டு வருகிறார்கள். அதற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைத்த உடனே மறந்து விடுகிறார்கள். ஒரு இயக்குனர் கூட ஷார்ட் பிலிம் பண்ணனும் என்று சொன்னதால் நானும் அவருக்காக செய்து கொடுத்தேன்.

-விளம்பரம்-

பிரதீப் ரங்கநாதன் குறித்து சொன்னது:

ஷார்ட் பிலிமில் நான் செய்த கதாபாத்திரத்தில் தான் சத்யராஜ் நடித்து இருக்கிறார். அதற்குப் பிறகு பெரிய பட வாய்ப்புகள் வந்தவுடன் அவர்கள் கண்டு கொள்வதில்லை. அவர் மட்டும் இல்லை எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்கள். சிறு படம் எடுக்கும்போது நம்மை நினைக்கிற அளவுக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைத்தவுடன் நினைப்பதில்லை. நானும் அதை எதிர்பார்த்து நடித்துக் கொடுப்பதில்லை என்று கூறியிருக்கிறார்.

lovetoday

டெல்லி கணேஷ் குறித்த தகவல்:

இப்படி டெல்லி கணேஷ் கூறிய இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தான். பிரதீப் அவர்கள் App Lock குறும்படம் பண்ணும் போதும் அதில் டெல்லி கணேஷ் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பலம்பெரும் நடிகராக திகழ்பவர் டெல்லி கணேஷ். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் தான் நடித்திருக்கிறார். 70 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை இவர் நடித்துக் கொண்டு இருக்கிறார். இவர் வெள்ளி திரையில் மட்டுமில்லாமல் சின்ன திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

Advertisement