மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்திற்கு எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் கடந்த சில வாரங்களாக போராடி வருகின்றனர். மத்திய அரசுடனான பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தீர்வு எட்டப்படாததால், குடியரசு தினத்தன்று டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இதனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.

விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பாருங்க : தற்கொலை கூட செய்ய நினைத்தேன், இதனால் தான் இந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துவிட்டேன் – அப்பாஸ்ஸின் உருக்கமான வீடியோ.

Advertisement

அதே போல விவசாயிகள் போராட்டத்தில் சில கலவரவாதிகள் புகுந்ததால் தான் போராட்டம் கலவரலாமாக காரணம் என்றும் விவசாயிகள் சிலர் கூறி இருந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் போலீசாருக்கு ஆதரவராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.இப்படி ஒரு நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், போராட்டம் என்பது அமைதியானது. ஆனால், போராடுபவர்கள் பயங்கரவாதிகள், துரோகிகள், வேற்றுகிரகவாசிகள், கூலிப்படையினர் என்று அழைக்கிறார்கள்.

Advertisement

போராட்டம் ஜனநாயகத்தைக் கொல்லும் என்று உங்களுக்குச் சொல்லும் பிரபலமான கோமாளிகள் எப்போதும் இருப்பார்கள். அவர்களை புறக்கணிக்கவும். பாசிசம், ஏகத்துவவாதம், பிற்போக்குத்தனமான வெறுப்பு அரசியல் மற்றும் ஏழை எதிர்ப்பு பிரச்சாரம் ஆகியவற்றில் நாம் கீழ்நோக்கி சரிவில் இருக்கிறோம். நின்று, சிந்தியுங்கள், தயாராக இருங்கள் போராடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். சித்தார்த்தின் இந்த பதிவை கண்ட பலரும் ரஜினியை தான் கோமாளி என்று சித்தார்த் மறைமுகமாக கூறியுள்ளார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

அதற்கு முக்கிய காரணமே, கடந்த 2018 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினி மக்கள் , எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என போனால், தமிழ்நாடு சுடுகாடாகிடும் என்று கூறி இருந்தார். ரஜினியின் இந்த கருத்து அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி ஒரு நிலையில் சித்தார்த்தின் இந்த பதிவு ரஜினியை தான் மறைமுகமாக தாக்கி இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement