சமீப காலமாக சினிமா துறைகளில் பிரபலங்கள் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தான் பிரபல காமெடி நடிகர் சேஷு மாரடைப்பை காரணமாக உயிரிழந்த நிலையில் தற்போது மாரடைப்பு காரணமாக காலமாகி இருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர் டேனியல் பாலாஜி. இவர் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். இவர் வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வட சென்னை போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து உள்ளார்.

இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்திலும், சூர்யாவின் காக்க காக்க படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அதன் பின்னர் தான் இவருக்கு வில்லன் ரோல் செட் ஆகும் என்று யோசித்த கெளதம் மேனன், வேட்டையாடு விளையாடு படத்தில் இவருக்கு அமுதன் என்ற கொடூரமான சைக்கோ வில்லன் ரோலை கொடுத்தார்.

Advertisement

இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்த இவருக்கு அடுத்தடுத்து வில்லன் வாய்ப்புகள் வந்தது. குறிப்பாக வெற்றிமாறன் இவருக்கு பொல்லாதவன் மற்றும் வட சென்னை ஆகிய இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தார். டேனியல் பாலாஜி ஆரம்பத்தில் சீரியலில் தான் நடித்து வந்தார். முதன் முதலில் சித்தி தொடரில் நடித்தார். அதனை தொடர்ந்து அலைகள் தொடரில் நடித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி அவர்கள் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். மேலும், நடிகர் பாலாஜி அவர்கள் விஜய்யின் பிகில் படத்திலும் , தனுசின் அசுரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.

Advertisement

இதனை தொடர்ந்து வெப்ஸ் சீரியசிலும் நடித்து வந்தார். அதிலும் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான God Man வெப் தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இறுதியாக இவர் மித்ரன் ஜவஹர் இயக்கிய அரியான் படத்தில் நடித்து இருந்தார். கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில நாட்களில் குணமாகி வீடு திரும்பினார்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் டேனியல் பாலாஜிக்கு நேற்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. திருவான்மியூர் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது வழியிலேயே இறந்து இருக்கிறார். அவருக்கு வயது 48. கொரோனாவில் நடிகர் பாண்டு, இயக்குனர்கள் கே.வி.ஆனந்த், தாமிரா, பாடகர் கோமகன், நடிகர் ஜோக்கர் துளசி ஆகியோர் கொரோனாவால் காலமாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement