‘வாரிசு’ படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை எவ்ளோ தெரியுமா ? அஜித் மாதிரி Try பன்றாரோ.

0
700
- Advertisement -

வாரிசு படத்தில் நடிகர் விஜய் ஓட்டும் பைக்கின் விலை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் வெளியிடப்பட்டு இருந்தது. பல எதிர்பார்ப்புடன் வெளிவந்த பீஸ்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் ‘தளபதி 66’ என்ற படத்தில் விஜய் நடிக்கிறார்.

- Advertisement -

தளபதி 66 படம்:

வம்சி தெலுங்கு சினிமா உலகில் முன்னணி இயக்குனர் ஆவார். மேலும், இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இயக்குனர் வம்சி- தயாரிப்பாளர் தில் ராஜூ ஆகிய இருவரும் இணைந்து பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.

படம் பற்றிய பிற தகவல்:

இவர்களுடன் இந்த படத்தில் ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைகிறார். பீஸ்ட் போன்ற படங்களில் இருந்த அதே லுக்கில் தான் விஜய் இந்த படத்திலும் இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு வாரிசு என பெயர் இடப்பட்டு உள்ளது. அந்த போஸ்டர் நேற்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

-விளம்பரம்-

படத்தின் போஸ்டர்:

இதனை அடுத்து இன்று காலை 11:44 மணி அளவில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியிருக்கிறது. இந்த போஸ்டரில் சிறுவர், சிறுமிகளுடன் விஜய் இருக்கிறார். இவ்விரு போஸ்டர்களும் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. இந்நிலையில் மூன்றாவதாக வாரிசு படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் விஜய் பைக்கில் அமர்ந்து இருப்பது போல காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பைக் குறித்த பேச்சு தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசுபொருளாக இருக்கிறது.

வாரிசு படத்தின் பைக் குறித்த தகவல்:

இந்த நிலையில் அந்த பைக் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, விஜய் அமர்ந்துள்ள இந்த பைக்கின் பெயர் யெஸ்டி அட்வெஞ்சர் (Yezdi Adventure). இந்த வகை பைக்கில் Adventure Matte Slick Silve, Adventure Matte Mambo Black மற்றும் Adventure Camo Ranger Camo என 3 மாடல்கள் உள்ளன. வாரிசு படத்தில் நடிகர் விஜய் பயன்படுத்திய பைக்கின் ஆரம்ப விலையே சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாம். லிட்டருக்கு சுமார் 35 கிலோ மீட்டர் வரை மைலேஜ் கொடுக்கிறதாம். ஆகவே, படம் வெளியானதும் இந்த பைக் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement