ரஜினியின் அண்ணாமலை பட மியூசிக்கை அப்படியே அஜித் படத்தில் பயன்படுத்தி இருக்கும் தேவா. நீங்களே கேளுங்க.

0
716
Deva
- Advertisement -

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழக்கையில் மறக்கமுடியாத படங்களில் “அண்ணாமலை” படமும் ஒன்று . கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் அடித்தது. சொல்லப்போனால் 175 நாட்களுக்கு மேலே ஓடி முதன் முறையாக அதிக வசூல் செய்த முதல் படம் அதுதான் தமிழ்நாட்டில் 1995 ஆண்டு வரையில். அதோடு பல விருதுகளையும் இந்த படம் பெற்றிருக்கிறது. அதற்கு பிறகு இந்த சாதனையை ரஜினிகாந்த் நடிப்பிலேயே வெளியான பாஷா முறியடித்தது.

-விளம்பரம்-

இந்நிலையில் “அண்ணாமலை” வெற்றிக்கு அப்படத்தில் நடித்த நடிகர்கள், ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவை காரணமாக இருந்தாலும், முக்கியமான காரணம் படத்தின் இசை தான். முன்பெல்லாம் படங்களில் பின்னனி இசை அதிகமாக போற்றப்படும், அதோடு படத்தில் கண்டிப்பாக மூன்று முதல் நான்கு பாடல்கள் இடம் பெரும். அந்த வகையில் அண்ணாமலை படத்தில் வந்த பாடல்கள் அனைத்துமே பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில் அண்ணாமலை படத்திற்கு இசையமைத்தவர் தற்போது முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தேவா தான்.

- Advertisement -

தேவா :

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் தேவா. இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் சினிமா துறையில் கடந்த 20 வருடங்களாக பயணித்து வருகிறார். இசையமைப்பாளர் தேவா என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது கானா தான். அந்த அளவுக்கு இவருடைய கானா பாடல்கள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இவருக்கு என்று ஓரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

ஆரம்ப காலங்களில் இசை கலைஞர்களான காமேஸ், ராஜாமணி ஆகியோரிடம் இவர் உதவியாளராக பணியாற்றி இருந்தார். அவர்களிடம் இருந்து ஹார்மோனியம் வாசிப்பதையும் கற்றுக் கொண்டார். அதன் பின்னர் இசை கலைஞர்களான சந்திர மௌலி, எஸ் வி சேகர் உள்ளிட்ட பலரிடமும் ஹார்மோனியம் வாசிப்பாளராக தேவா பணியாற்றி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் சில காலம் தூர்தர்ஷனில் அலுவலக பணியாளராக பணியாற்றி இருந்தார். ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

தேவாவின் இசைப்பயணம்:

அதனால் இவர் அதிகம் பக்தி பாடல்களில் கவனம் செலுத்தினார். இதுவரை இவர் கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இசையமைத்திருக்கிறார். பின் 1984 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான மனசுக்கேத்த மகாராசா என்ற படத்தில் இசையமைப்பாளராக தேவா அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல படங்களுக்கு இசை அமைத்தார். மேலும், இவர் விஜய்,அஜித்,ரஜினி,கமல் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து பாடியிருக்கிறார். சொல்லப் போனால் 90 காலகட்டத்தில் வெளிவந்த தேவாவின் பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கேட்கப்பட்டு தான் வருகிறது.

ஒரே இசை இரண்டு படங்களில் :

இந்நிலையில் தான் இவர் இசையமைத்த படங்களில் ஒன்றான “அண்ணாமலை” படத்தில் வரும் பின்னணி இசை ஆச்சரியப்படும் படியாக வேறொரு படத்தில் வந்துள்ளது. ஆம் அண்ணாமலை படம் வெளியாகி 7 வருடங்களுக்கு பிறகு கடந்த 1999ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான “உன்னை தேடி” படத்தில் வரும் சில காட்சிகளில் இதே போன்ற இசை இடம்பெற்றுள்ளது. இது யாருக்கும் தெரியாதா ஒன்றுதான். ஆனால் இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் தேவாதான் இசையமைத்தார் என்பது இங்கே குறிப்பிடதக்கது.

அந்த காலம் vs இந்த காலம் :

அந்த காலத்தில் அப்படி பல படங்களில் ஒரே இசையை பயன்படுத்தினாலும் அங்காங்கே சில மாறுதல்கள் செய்து மறைத்து விடுகின்றனர் இல்லையேல் அந்த பாணியில் இசையமைத்து விடுகின்றனர். ஆனால் தற்போது ஒரு பாடல் வரியோ அல்லது இசையோ சிறிது ஒன்றி இருந்தால் கூட பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறது. அப்படிதான் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” படத்தில் வரும் “ரஞ்சிதமே” பாடலை “மொச்ச கொட்ட பல்லழகி” பாடலுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வந்தது குறிப்பிடதக்கது.

Advertisement