சமீபத்தில் +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற நாங்குநேரி மாணவன் சின்னதுரையை நடிகர் தாடி பாலாஜி நேரில் சென்று சந்தித்து பாராட்டி இருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கூலி தொழில் செய்கிறார். இவருக்கு 17 வயதில் சின்னத்துரை என்ற மகனும், 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். கடந்த ஆண்டு இந்த பள்ளியில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை.

இதனால் பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு கேட்டு இருக்கிறார்கள். இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற சின்னத்துரையிடம் ஆசிரியர்கள் விசாரித்து இருக்கிறார்கள். அப்போது சில மாணவர்கள் தன்னை சாதி வன்கொடுமை செய்து இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால் அந்த மாணவர்களை பள்ளி நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. பின் வீட்டில் தனியாக இருந்த அந்த மாணவனும், அவருடைய தங்கையும் மூன்று பேர் சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து இருவரையும் அரிவாளால் சாரா மாறியாக வெட்டிவிட்டு தப்பி ஓட்டியிருக்கிறார்கள்.

Advertisement

நாங்குநேரி சம்பவம்:

இதை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தார்கள். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில், சின்னத்துரை மாணவன் படிக்கும் பள்ளியில் சில சீனியர் மாணவர்கள் அவரை தொந்தரவு செய்திருக்கிறார்கள். இது குறித்து அவர் பெற்றோரிடமும் தலைமை ஆசிரியர் இடம் கூறி இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சீனியர்கள் அந்த மாணவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள் என்பது தெளிவு தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.

மாணவன் செய்த சாதனை:

சாதி வன்மத்தால் தான் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இதில் ஈடுபட்ட 6 பேரை போலீஸார் கைது செய்து இருந்தது. மேலும், மாணவன் சின்னதுரை அவர்கள் நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 க்கு 469 மதிப்பெண் பெற்று இருக்கிறார். உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் மனம் தளராமல் படித்து மாணவர் சின்னதுரை சாதனை செய்ததற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அது மட்டும் இல்லாமல் மாணவர் சின்னதுரையின் உயர்கல்விக்கான மொத்த செலவையும் தமிழ்நாடு அரசு ஏற்பதாக அறிவித்திருக்கிறது.

Advertisement

அதே போல பல்வேரு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் சின்னதுரைக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் நடிகர் தாடி பாலாஜி, திருநெல்வேலிக்கே சென்று சின்னதுரையை பாராட்டி இருக்கிறார். மாணவன் சின்னத்துரையை சந்தித்துவிட்டு பேசிய தாடி பாலாஜி ‘ பல விஷயங்களைக் கடந்து சின்னதுரை இந்த விஷயத்தை பண்ணியிருக்கார். பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்று அவரது குடும்பத்தினருக்கு பெருமை சேர்த்து கொடுத்திருக்கார். எல்லாத்தையும் விட பெரிய விஷயம், முதல்வரை சந்தித்த பின் அவர் கொடுத்த பேட்டியில் சொன்னதுதான்.

Advertisement

தன்னை தாக்கியவர்களும் தன்னை மாதிரி பெரிய அளவில் படிச்சு, ஒரு இடத்துக்கு வர வேண்டும் என சொன்னது. அந்த ஒரு பதிலுக்காகவே அவரை பார்க்க வேண்டும் என வந்தேன். எல்லாத்தையும் விட முதல்வர் சின்னதுரையை அழைத்து, அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி” என்றார். மேலும் சின்னதுரை மற்றும் அவரது குடும்பதினருக்கும் எந்த உதவி வேண்டுமானாலும் தன்னால் முடிந்ததை செய்வேன்’ என்று கூறியுள்ளார்.

Advertisement