20 வருசத்துக்கு முன்னாடி வந்த படத்த கொண்டாடுறீங்க. ஆனா, 20 வருசத்துக்கு முன்னாடி செய்த இந்த விஷயத்தை மறந்துடீங்களே தாமு ஆதங்கம்.

0
157
- Advertisement -

கில்லி படம் குறித்து நடிகர் தாமு விரக்தியில் பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு.

-விளம்பரம்-

மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள். அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

கில்லி படம்:

என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். பொதுவாகவே படங்களை ரீ ரிலீஸ் செய்யப்பட்ட சில தினங்களில் நிறுத்தி விடுவார்கள். ஆனால், கில்லி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குறையவே இல்லை. குறிப்பாக, இளம் தலைமுறையினர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

படம் குறித்த தகவல்:

மேலும், ரீ ரீலீஸ்ஸில் கில்லி திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதோடு சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களாக கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், இயக்குனர், படக்குழு என அனைவருமே தங்களுடைய அனுபவங்களை பேட்டியில் பகிர்ந்து வருகின்றார்கள். இந்த நிலையில் கில்லி திரைப்படம் குறித்து நடிகர் தாமு, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கில்லி படம் வெளியானது.

-விளம்பரம்-

படம் குறித்து சொன்னது:

அந்த படத்தில் ஓட்டேரி நரி என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்திருந்தேன். 20 வருடங்கள் கழித்து அந்த படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது. 20 வருடங்களுக்கு முன்பு வெளியான கில்லி படத்தை விசில் அடித்து கொண்டாடுகிறார்கள். ஆனால், 20 வருடங்களுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் தற்போது பல இடங்களில் வெயிலுக்கு நிழல் தருகிறது. அந்த மரக்கன்றுகளை நட்டவர்களுக்கு எப்போதாவது விசில் அடித்து கொண்டாடி இருக்கிறீர்களா? என்று நிகழ்ச்சி ஒன்றில் ஆதங்கத்தில் தாமு பேசியிருக்கிறார்.

தாமு குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தாமு. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி மற்றும் குண சித்திர வேடங்களில் தாமு நடித்திருக்கிறார். பின் சமீப காலமாக இவர் சினிமாவில் இருந்து விலகி விட்டார். இவர் மறைந்த குடியரசு தலைவரின் சிறந்த மாணவன் என்றும் கூறலாம். அப்துல் கலாமின் சிந்தனைகளை மட்டுமல்ல செயல்களையும் ‘லீட் இந்தியா ‘ என்ற அமைப்பின் மூலம் மாணவர்களிடம் கொண்டு சென்று அப்துல் கலாம் கனவை நினைவாக்கி வருகிறார் தாமு.

Advertisement