சமீப காலமாகவே முன்னணி நடிகர், நடிகைகள் இடையே காதல், கல்யாணம் போன்ற கிசுகிசுக்கள் பரவுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதில் சில விஷயங்கள் உண்மையாக இருந்தாலும், சில விஷயங்கள் வதந்திகள். அதை விளம்பரத்திற்காகவே செய்கிறார்கள். அந்த வகையில் தற்போது தனுஷ்-மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாக சமீப காலமாக சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. சில மாதங்களுக்கு முன் மிருணாள் படத்தினுடைய விழாவிற்காக சிறப்பு விருந்தினராக தனுஷ் வந்திருந்தார்.

உடனே இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இருவருக்கும் ஏதாவது கிசுகிசு இருக்கிறதா? என்றெல்லாம் கூற ஆரம்பித்து விட்டார்கள். அதற்குப்பின் மிருணாள் பிறந்தநாள் விழாவிலேயுமே தனுஷ் கலந்திருந்தார். அதனை எடுத்து அடிக்கடி தனுஷ் அவர்கள் மிருணாள் உடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். இதனால் இருவரும் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் செய்திகள் பரவ தொடங்கியது. பின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் மிருணாள் தாக்கூர், தனுஷ் எனக்கு நல்ல நண்பர். தேவையில்லாமல் எங்களைப் பற்றி தவறான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது என்றார்.
தனுஷ்-மிருணாள்:
இருந்தாலும், தனுஷ்-மிருணாள் பற்றிய வதந்திகள் சோசியல் மீடியாவில் ஓய்ந்தபாடில்லை. இப்படி இருக்கும் நிலையில் தனுஷ் பற்றி இதுபோன்ற வதந்திகள் வருவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பு சில நடிகைகளுடன் தனுஷ் காதல் கிசு கிசுவில் சிக்கியிருந்தார் என்ற செய்திகள் நிறைய வந்திருந்தது.
அந்த வகையில் முதலில் ஸ்ருதிஹாசன் உடன் தான் தனுஷ் பற்றிய காதல் கிசுகிசு வந்தது. 3 படத்தில் தனுஷ், ஸ்ருதியின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இவர்கள் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்பட்டது.

தனுஷ் காதல் சர்ச்சை:
இந்த செய்திகளை அப்போதே ஸ்ருதிஹாசன் மறுத்துவிட்டார். அதற்குப்பின் வேலை இல்லா பட்டதாரி படத்தில் தனுஷ், அமலா பாலின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தது. அந்த படத்தின் போது தான் அமலா பாலுக்கு விவாகரத்தும் நடந்தது. ஆனால், அமலா பால் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். அதனை அடுத்து தனுஷ், திரிஷா இடையே காதல் கிசுகிசு இருப்பதாகவும், பார்ட்டிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வதாகவும் செய்திகள் வந்தது.

தனுஷ்-மிருணாள் சர்ச்சை:
பின் நாங்கள் நல்ல நண்பர்கள் தான் என்று இருவருமே கூறியிருந்தார்கள். தற்போது தனுஷ்-மிருணாள் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற செய்தி காட்டுத்தீயை போல இணையத்தில் பரவிக் கொண்டிருக்கிறது. அதோடு இவர்கள் இருவரும் ஒரு புது படத்தில் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதற்கு தனுஷ் தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதை பார்க்கலாம்.






