செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சோனியா அகர்வால்.! கைவிடப்பட்ட படம்.! வெளியான போட்டோ ஷூட்.!

0
1525
Dhanush-Selvaragavan
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது. அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

இதையும் படியுங்க : மீண்டும் வராங்க தனுஷ் மற்றும் செல்வராகவன்.! ரசிகர்கள் குஷி.!

- Advertisement -

அதிலும் இவர், தனுஷை வைத்து எடுத்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது வரவேற்பைப் பெற தவறவிட்டாலும் இன்றளவும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. அதே போல காதல் கொண்டேன் படத்திற்கு பின்னர் செல்வராகவன் தனுஷ் மற்றும் சோனியா அகர்வாலை வைத்து புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார்.

ஆர் கே புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு யுவன் இசையப்பக்க, அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருந்தனர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் கூட நிறைவடைந்த நிலையில் சில பல காரணங்களால் இந்த படம் கைவிடபட்டது. இந்த படத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் நமக்கு கிடைக்கபெற்றுள்ளது.

-விளம்பரம்-
Advertisement