விஜய்யின் லியோ படத்தில் கொக்கி குமார்- எல்சியூ-வில் இணைகிறாரா தனுஷ்?

0
856
- Advertisement -

லோகேஷின் எல்சியூவில் தனுஷ் நடிக்கஇருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராகத் திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வந்த அனைத்து படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டும் இல்லாமல் கோடிக்கணக்கில் சம்பாதித்து சாதனை படைத்து வருகிறது. ஆரம்பத்தில் இவர் ஒரு தனியார் வங்கியில் தான் வேலை செய்து வந்தார். பின் இவர் சினிமா மீது இருந்த ஆசையால் 80 ஆயிரம் ரூபாய் பண செலவில் ஒரு “களம்” என்ற படத்தின் மூலம் மீடியாவுக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

அதன் பின் “மாநகரம்” என்ற படத்தை லோகேஷ் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சஸை கார்த்தி நடித்த “கைதி” படத்தின் மூலம் தொடங்கினார். அதற்கு பிறகு வந்த மாஸ்டர், விக்ரம் என பெரிய கலைஞர்கள் வைத்து பிரம்மாண்ட அளவில் ஹிட் கொடுத்துள்ளார். அதிலும் கமலின் திருப்புமுனையாக விக்ரம் படம் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து “லியோ” படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ்.

- Advertisement -

லியோ படம் :

இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சஞ்சய் தட், த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மேத்திவ் தாமஸ், மிஸ்கின், மன்சூர் அலி கான் என பலர் நடித்து வருகின்றனர். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் லியோ படம் உருவாகி வருகிறது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அதிரடி ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

படம் குறித்த தகவல்:

மேலும், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் வெளியாகி இருக்கிறது. இந்தப்பாடலுக்கு பிரபல நடன இயக்குநர் தினேஷ் நடன வடிவமைப்பு செய்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது இந்த நா ரெடி பாடல் தான் பட்டித்தொட்டி எங்கும் ஒலித்து கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

லியோவில் நடிக்கும் பிரபலங்கள்:

இந்த படத்தில் பாலிவுட்டில் இயக்குனர் அனுராக் காஷ்யாப் இணைந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் லியோ படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பட குழு தனுஷ் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

கொக்கி குமார் ரோலில் தனுஷ்:

ஏற்கனவே நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படத்தில் கொக்கி குமாரு என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்தார். தற்போது இவர் மீண்டும் லியோ படத்திலும் கொக்கி குமாராக நடிப்பாரா? என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். ஆகவே, லியோ படம் எல்சியூவுக்கு கீழ் வருமா என்பதை தெரிந்து கொள்ள இன்னும் மூன்று மாதங்கள் காத்திருங்கள் என்று பேட்டியில் லோகேஷ் கூறியிருக்கிறார்.

Advertisement