இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்பகாலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார்.

அதன் பின்னர் தனுஷை வைத்து இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு காதல் கொண்டேன் படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது. அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது.

Advertisement

அதிலும் இவர், தனுஷை வைத்து எடுத்த ‘புதுப்பேட்டை’ படம் ரசிகர்கள் மத்தியில் அப்போது வரவேற்பைப் பெற தவறவிட்டாலும் இன்றளவும் இப்படம் பேசப்பட்டு வருகிறது. இந்த படம் தற்போதுள்ள ரசிகர்கள் ஆசைப்படுவது என்னவெனில் புதுப்பேட்டை போன்ற படம் தற்போது வந்திருந்தால் அது தனுஷிற்கு மாபெரும் ஹிட் படமாக அமைந்திருக்கும் என்பதுதான். இதனால் புதுப்பேட்டை போன்ற படத்தை எப்போது எடுப்பீர்கள் என்று செல்வராகவனை பலமுறை கேட்டும் வருகின்றனர்.

அதே போல மயக்கமென்ன படத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணி எப்போது இணையும் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது புதுப்பேட்டை படத்தை ரீ ரிலீஸ் செய்யவிருக்கின்றனர். கிட்டத்தட்ட பதிமூன்று ஆண்டுகள் கழித்து இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் ஆக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
Advertisement