தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சிம்பு திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவரை தென்னிந்திய சினிமா உலகின் சர்ச்சை நாயகன் என்று சொல்வார்கள். ஏன்னா, அந்த அளவிற்கு இவரைக் குறித்து சோஷியல் மீடியாவில் பல விமர்சனங்களும் வதந்திகளும் வந்தவண்ணம் இருக்கும். என்னதான் இவரை குறித்து சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் வந்தாலும் சிம்புவுக்கு இன்றும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன் படம் மாபெரும் தோல்விப்படமாக அமைந்தது.

இந்த படத்தை தொடர்ந்து மாநாடு படத்தில் நடித்து வந்தார் சிம்பு. இந்த படம் தீபாவளிக்கு வெளிவாவதாக அறிவித்து இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனதாக அறிவித்தனர். இதுகுறித்து வெளியிடபட்ட அறிக்கையில், நீடித்த கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்கு காத்திருக்கிறது மாநாடு. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக படம் வெளியிட அனைத்து வேலைகளும் செய்யப்பட்டது. படம் யாரோடும் போட்டி போடுவதற்காக வெளியிடவில்லை.

Advertisement

ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை பார்ப்பது வழக்கம். அதை கருத்தில் வைத்து தான் தீபாவளிக்கு வெளியிட முடிவு எடுத்தோம். போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படிப்பார்த்தால் அது வியாபார புத்திசாலித்தனம் அல்ல. மாநாடு படம் நன்றாக வந்துள்ளது. அதன் மீது நம்பிக்கை உள்ளது. என்னை நம்பி பட வியாபாரம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

அதேபோல் விநியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். யாரும் நஷ்டம் அடையக் கூடாது. சில காரணங்களுக்காக ஏன் படமும் அதன் வெற்றியையும் பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாகவுள்ளது. நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும்.

Advertisement

ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் சிம்புவின் மாநாடு படமும் தீபாவளி அன்று வெளியாகுவதாக இருந்தது. ரஜினி, சிம்பு படங்கள் ஒன்றுக்கொன்று ஒன்று மோதும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு தகவல் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இப்படி ஒரு நிலையில் தன் மகன் படங்களுக்கு மட்டும் ஏன் தொடர்ந்து பிரச்சனை கொடுகிறார்கள் என்று டி ஆர் ஆவேசமாக பேசி இருகிறார்.

Advertisement

ரு படம் ரிலீஸ் ஆகணும்னா, கழுத்துல கத்தி வைக்குறாங்க. அத்தனை கோடி பறிமுதல் பண்றாங்க. இவங்க என்ன மிரட்டி கொள்ளையடிக்கற கோஷ்டியா? மடக்கி பணம் பறிக்கக்கூடிய மாஃபியாவா? என்று கூறிய டி ஆர், தீபாவளிக்கு அண்ணத்த ரிலீஸ் ஆவதால் தான் மாநாடு வெளியாகவில்லையா என்று கேள்வி கேட்கப்பட்டதற்கு என்னத்தா ரிலீஸ் பண்ணலாம் சரி. என் மகன் படம் வெளியாக நான் கோட்ட முன்னாடியும் ஒக்காருவேன் முதல்வர் வீட்டு முன்னாடியும் ஒக்காந்து போராட்டம் பண்ணுவேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

Advertisement