ஜீசஸ்டா, இல்ல இல்ல போதி தர்மர் டா – கேலிக்கு உள்ளான தனுஷ்ஷின் லுக். வைரலாகும் மீம்ஸ்.

0
554
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் இட ஒதுக்கீடு குறித்து கூறியுள்ள கருத்து தற்போது சர்ச்சையாக மாறி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் வந்த அனைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் “வாத்தி”.

-விளம்பரம்-

இப்படத்தில் வெங்கி அட்லூரி இயக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் நடிகை சம்யுக்தா தனுஷுக்கு ஜோடியாக நடிக்க, மொட்டை ராஜேந்திரன், சமுத்திரக்கனி, கென் கருணாஸ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொறியியல் மருத்துவம் போன்ற கல்விகள் வியாபாரமாக்கும் நோக்கத்தில் தனியார் பள்ளிகள் அரசு பள்ளிகளை மூடினர். இதனை எதிர்த்து மக்கள் போராடும் போது அவர்களின் பிரச்னைகளை தீர்ப்பதாக வருகிறார் சமுத்திரக்கனி.

- Advertisement -

ஆசிரியராக தனுஷ் :

ஆனால் அரசு பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகளை சேர்ந்த இரண்டாம் மற்றும் முற்றம் தர ஆசிரியர்களை வைத்து கல்வி கொடுக்க நினைக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க பெற்றோர் ஆதரவு மற்றும் நிர்வாகத்தின் ஆதரவு இல்லாத அரசு பள்ளியில் தன்னுடைய திறமையை காட்ட வேண்டும் என்று வருபவர் தான் நடிகர் தனுஷ் . இவர் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையை கல்வி மூலம் எப்படி மாற்றுகிறார் என்பது தான் மீதி கதையாக இருக்கிறது.

இந்த நிலையில் வாத்தி திரைப்படம் கடந்த 17ஆம் தேதி வெளியாகி நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் “வாத்தி” வெளியாகி ஒரு வாரம் முடிவடையும் நிலையில் 60 கோடிக்கு மேல் வாத்தி படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் தெலுங்கு மொழியில் சார் என்ற படமும், தமிழில் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

வா வாத்தி பாடல் :

மேலும் தனுஷ் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பாடிய பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடிக்கும், ஏனென்றால் ஒரு நடிகர் நடித்துவிட்டு அவரே அந்த படத்திலும் பாடுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அந்த வகையில் வாத்தி படத்தில் தனுஷ் பாடிய “வா வாத்தி” பாடல் பெரிய அளவு ஹிட் அடித்தது. இந்தநிலையில் தான் வாத்தி படத்தில் தனுஷ் பாடும் “வா வாத்தி” பாடலின் விடியோவை இசையமைப்பாளர் ஜி.பி பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

கலாய்க்கும் நெட்டிசன்கள் :

அந்த வீடியோவில் தனுஷ் அடர்த்தியான தாடியுடன் ஒரு ஆரஞ் கலர் சால்வை அணிந்து பாடலை பாடியுள்ளார் தற்போது நடித்துவரும் “கேப்டன் மில்லர்” படத்தில் தனுஷ் நீண்ட முடியுடன் இருக்கும் லுக்கில் நடித்து வருகிறார். இந்நிலையில் அதே லுக்கில் தனுஷ் இப்பாடலை பாடியதால் பலர் இவர் சாமியாராகிவிட்டார் என கேலி செய்து வருகின்றனர். மேலும் சிலர் இன்னும் ஒரு படி முன்னே சென்று இது போதிதர்மர் என்றும் ஜீசஸ் என்று மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Advertisement