சிம்புவா…? அவர் வேண்டாம் நானே நடிக்கிறேன்..! சிம்புவின் பட வாய்ப்பை பறித்த தனுஷ்..!

0
1020
Dhanushsimbhu
- Advertisement -

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “பொல்லாதவன், ஆடுகளம்” போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து தற்போது வெற்றி மாறன் – தனுஷ் வெற்றிக் கூட்டணியின் 3 வது திரைப்படம்தான் “வடசென்னை”. ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, கருணாஸ், கிஷோர், ராதாரவி போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்துள்ளனர்.

-விளம்பரம்-

Dhanush-vadachennai

- Advertisement -

தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை லைக்கா நிறுவனம் வெளியிடஇருக்கிறது. மேலும், இந்த படம் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக உள்ளது நிலையில் சமீபத்திகில் இந்த படத்தின் பிரெஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய தனுஷ், வடசென்னை கதையை வெற்றி மாறன் பண்ண ஆரம்பித்துப் பல வருடங்கள் ஆகிறது. இது ரொம்பப் பெரிய கதை. அதுனால ஆடுகளம் பண்ணினோம். அப்புறம் ஒரு பிரேக் எடுத்து வேலை செய்யலாம்னு முடிவு பண்ணினோம். அப்புறம் வெற்றி மாறன் ஒருநாள் `வடசென்னை’ படத்தை சிம்புவை வைத்துப் பண்ணலாம் என்று இருக்கேன்னு சொன்னார்.

-விளம்பரம்-

vada-chennai

நான் இப்போ படத்துல பண்ணிருக்க அன்பு கேரக்டரை சிம்பு பண்றதாகவும், படத்துல குமார்னு ஒரு பவர்ஃபுல் கேரக்டர் வருது, அத என்னைப் பண்ணச் சொல்லி கேட்டாங்க.நான் சொன்னேன், சார் எனக்குக் கொஞ்சம் பெருந்தன்மை இருக்கு. ஆனா அவ்ளோ பெருந்தன்மை எல்லாம் இல்ல. தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு இதுல உடன்பாடு இல்லைனு சொல்லிட்டேன்.

சிம்புக்குச் சொன்ன கதையில் நான் உடனே நடிச்சா தேவையில்லாத சர்ச்சை வரும். நாம வேற கதை பண்ணலாம்னு நிறைய கதைகள் டிஸ்கஸ் பண்ணினோம். நாம வேற கதை பண்ணலாம்னு நிறைய கதைகள் டிஸ்கஸ் பண்ணினோம். பல வருஷம் கழிச்சு மறுமடியும் என்கிட்டே `வடசென்னை’ வந்திச்சு. இதுல வெட்கப்பட ஒண்ணுமே இல்ல. காரணம், ஒரு நடிகருக்கு இந்தப் படம் மிக முக்கியமான படமா இருக்கும் என்று பேசியுள்ளார் தனுஷ்.

Advertisement