இளம் பெண்ணுடன் ரெஸ்டாரெண்டில் லஞ்ச் சாப்பிடும் தனுஷ்- அந்த பெண் யார் தெரியுமா?

0
964
dhanush
- Advertisement -

இளம் பெண் ஒருவருடன் தனுஷ் ரெஸ்டாரன்டில் லஞ்ச் சாப்பிட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக தனுஷ் திகழ்ந்து வருகிறார். இவர் ‘துள்ளுவதோ இளமை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், தனுஷ் அவர்கள் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் சாதித்து வருகிறார்.

-விளம்பரம்-

அதிலும் சமீப காலமாகவே இவர் கோலிவுட்,டோலிவுட்,பாலிவுட், ஹாலிவூட் என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் மனைவியான ஐஸ்வர்யாவும் இயக்குனர் ஆவார். மேலும், இவர்களுக்கு யாத்ரா , லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் இருவரும் தாங்கள் பிரிவதாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து இருப்பது ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது.

- Advertisement -

தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து:

18 ஆண்டு திருமண வாழ்வில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் பயங்கர பேசும் பொருளாக உள்ளது. மேலும், இவர்களின் இந்த முடிவை தொடர்ந்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல விதமான கருத்துக்களை போட்டு வருகின்றனர். அதோடு தனுஷ்- ஐஸ்வர்யா இருவருக்கும் நடுவில் என்ன நடந்தது? என்று தெரியாமல் பலரும் பல விதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது தனுஷ் வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷ் நடிக்கும் வாத்தி படம்:

இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஹைதராபாத்தில் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே தனுஷ் அவர்கள் ஹைதராபாத்தில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு லஞ்ச் சாப்பிட சென்று இருக்கிறார். அப்போது அவர் சாப்பிடும் போது எடுத்த புகைப்படம் தான் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அவருடன் இருக்கும் இளம் பெண் குறித்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். அவர் வேற யாரும் இல்லைங்க, தனுஷ் அவர்களின் காஸ்ட்யூம் டிசைனர்.

-விளம்பரம்-

தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம்:

இருவரும் சேர்ந்து தான் லஞ்ச் சாப்பிட்டு ஒரு சில மணி நேரங்கள் அந்த ரெஸ்டாரன்டில் இருந்ததாகவும் அதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனுஷ் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இந்தப்படத்தில் தனுஷ், சமுத்திரகனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. அதோடு காதலர் தினத்தையொட்டி இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

அது மட்டும் இல்லாமல் மாறன் படத்தில் தனுஷ் மற்றும் மாளவிகாவின் கேரக்டர் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. மாறன் மற்றும் தாரா என்ற கதாபாத்திரங்களில் இருவரும் நடித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் தனுஷ் தி கிரேட் மேன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்து உள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் அவர்கள் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி தொடர்ந்து தனுஷ் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement